Sunday, 22 December 2013

நைஜீரியாவின் மகப்பேறு தொழிற்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 கர்ப்பிணி பெண்களை போலீசார் மீட்டனர்

நைஜீரியாவின் மகப்பேறு தொழிற்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 கர்ப்பிணி பெண்களை போலீசார் மீட்டனர்

Source: Tamil CNN
ஆப்பிரிக்காவின் எண்ணை வளம் மிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். 17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்நாட்டில் உள்ள ஏராளமான ஏழை மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு 2 டாலர்களை விட குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது.
விபச்சாரம், கள்ளத் தொடர்பு, திருமணத்துக்கு முந்தைய பிள்ளைப்பேறு போன்றவை இங்கு சர்வசாதாரண செயல்களாக கருதப்படுகின்றது. திருமணத்துக்கு முன்னர் கருத்தரிக்கும் சில பெண்கள், சமூகத்தின் ஏச்சுப் பேச்சுக்களுக்கு பயந்து, உள்ளூரை விட்டு வெளியேறி, ரகசியமான இடங்களில் சில மாதங்கள் தங்கியிருந்து, பிள்ளைகளை பெற்றெடுக்கின்றனர்.
பிரசவத்துக்கு பின்னர் பெற்றெடுத்த குழந்தைகளை சிலரிடம் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு, மீண்டும் ஒன்றும் அறியாத கன்னிப் பெண்களைப் போல் தங்கள் வீடு வந்து சேர்ந்து விடுவது அங்கு வாடிக்கையாகி விட்டது.
இத்தகைய பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்கென்றே, பிழக்கத் தெரிந்த சில பெண்கள், ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து ‘மகப்பேறு தொழிற்சாலை’களை நடத்தி வருகின்றனர். வறுமை நிலையில் உள்ள இளம் பெண்களுக்கு வலைவிரிக்கும் இவர்கள், அவர்களை வற்புறுத்தி, பிற ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடுத்தி, கருத்தரிக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.
இவ்வகையில் பிறக்கும் குழந்தைகளை உள்நாட்டில் வசிக்கும் பிள்ளை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கோ, வெளிநாட்டினருக்கோ விற்றும் சிலர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து ஒரு சிறிய தொகையை மட்டும் பிரசவிக்கும் தாய்களுக்கு தரும் இவர்கள், இத்தகைய ‘மகப்பேறு தொழிற்சாலை’களின் மூலம் கொழுத்த லாபம் சம்பாதித்து பணக்காரர்களாக மாறி வருகின்றனர்.
இதுபோன்ற ரகசிய பிரசவ கூடங்களை தேடி கண்டுபிடித்து, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய போலீசார் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்கிழக்கு மாநிலமான அபியாவின் தலைநகர் உமுவாஹியா முழுவதும் போலீசார் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் 15 முதல் 23 வயதுக்குட்பட்ட 19 கர்ப்பிணி பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டு பிடித்தனர்.
அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட அந்த குழந்தை விற்பனை மையத்தின் இடைத்தரகரும், காப்பகத்தின் ஒரு பெண், போலீசாரின் கைகளில் சிக்காமல் தப்பி தலைமறைவாகி விட்டார்.
5 மாதம் முதல் நிறைமாதம் வரை பல்வேறு கர்ப்ப நிலையில் இருந்த அந்த 19 பெண்களையும் மீட்ட போலீசார், தப்பிச் சென்ற பெண்ணின் மகன் மற்றும் மருமகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...