Thursday, 23 May 2013

இங்கிலாந்தில் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? என எதிர்பார்ப்பு!

இங்கிலாந்தில் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? என எதிர்பார்ப்பு!

Source: Tamil CNN
இங்கிலாந்திலுள்ள சேவல் ஒன்று விரைவில் உலகின் மிகப் பெரிய சேவலாக இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள மௌன்ட்பிட்சட் கெஸ்ல் பண்ணையில் வளரும் வேவல் ஒன்றே இவ்வாறு கின்னஸில் இடம்பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லிட்டில் ஜோன் எனப்பெயரிடப்பட்டுள்ள இச்சேவலின் நீளம் 66 செ.மீ (26 இன்ச்) ஆகும். இந்த சேவல் கூறித்து அதன் உரிமையாளரான 45 வயதாகும் ஜெரமி கோல்ட்ஸ்மித் கூறுகையில், சாதாரண சேவல்களுடன் ஒப்பிடுகையில் லிட்டில் ஜோன் மிக உயரமானது.
மேலும் லிட்டில் ஜோன் கின்னஸில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இதற்கு முன்னர் கின்னஸில் இடம்பிடித்துள்ள மெல்வின் என்ற சேவல் 60 செ.மீ. (24 இன்ச்) எனவே லிட்டில் ஜோன் கின்னஸில் இடம்பிடிக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இதேவேளை கின்னஸ் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், குறித்த சேவல்களின் அளவீடுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் லிட்டில் ஜோன் கின்னஸில் இடம்பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice

  Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...