இன்டர்நெட் எனும் இணையதளம்
1969 செப்டம்பர் 2ம் தேதி, ஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரு மையங்களில் இயங்கிய இரு கணனிகள் அர்த்தமில்லாத டேட்டாவினைத் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு, பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கான விதையை ஊன்றின. 15 அடி நீளமுள்ள கேபிள் வழியாக இது சாத்தியமானது.
1972ல் ரே டாம்லின்சன் (Ray Tomlinson) என்பவர் இணையதளத்தில் மின்னஞ்சல் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார்.
1974ல் டி.சி.பி. (TCP) என அழைக்கப்படும் இணையதள புரோட்டோகால் வகையை Vint Cerf மற்றும் Bob Kahn என்ற இருவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். இதுதான் முழுமையான இணையதளத்தின் முதல் இயக்கமாகும்.
1988ல் Morris என்ற வைரஸ் முதன்முதலில் பரவி பல கணனிகளை முடக்கியது.
1990ல் நியூக்ளியர் ஆய்வுக்கென இயங்கிய CERN ஐரோப்பிய அமைப்பிலிருந்தவாறே, தொலைதூரக் கட்டுப்பாட்டினை அமல்படுத்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர் வேர்ல்ட் வைட் வெப் (World Wide Web) எனும் அமைப்பினை உருவாக்கினார்.
1993ல் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreessen) தன் சகாக்களுடன் இணைந்து மொசைக் (Mosaic) என்னும் முதல் இணையதள பிரவுசரை உருவாக்கினார்.
1995ல் அமேசான் டாட் காம் (Amazon.com) எனும் இணையதளம் தன் கதவுகளை உலக மக்களுக்கு இணையதளம் வழியே திறந்தது.
2004ல் ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerberg என்பவர் பேஸ்புக் (Facebook) தளத்தை உருவாக்கித் தந்தார்.
2005ல் வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள யு–ட்யூப் தளம் உருவானது.
2006ல் இணையதளத்தைப் பயன்படுத்தும் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது.
2008ல் இணையதள மக்கள் தொகை 150 கோடியை எட்டியது.
2009ல் முழுவதும் இணையதளத்திலேயே வெளியிடப்படும் தினசரி செய்தித்தாள் Seattle PostIntelligencer வெளியானது. இன்று பெரும்பாலான பத்திரிகைகள் வலைத்தளம் வழியாகவும் மக்களைச் சென்றடைகின்றன.
No comments:
Post a Comment