Saturday 18 May 2013

திமிங்கலம்

திமிங்கலம்
திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன.
இதில், ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. இது ஏறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது.
உலகிலேயே அதிகச் சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். நீலத்திமிங்கலம் தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்றுள்ளதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும். இவை ஒரு முறை சுவாசித்த பின்னர் 80 நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. பாலூட்டிகளின் கூட்டத்தில் மிக மிக அதிக தூரப் பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பும் திமிங்கிலங்களுக்கு உண்டு.
திமிங்கலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.

ஆதாரம் : சித்தார்கோட்டை

No comments:

Post a Comment