பற்பசை உருவான வரலாறு
ஏறத்தாழ
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்த இந்திய
மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம் இருந்ததாக
அறியப்படுகிறது. ஆரம்பத்தில் குருமணலை பல் துலக்குவதற்காகப் பயன்படுத்திய
இவர்கள் போகப்போக எரிந்த மரங்களின் சாம்பலை விரலால் தொட்டு பல் துலக்க
ஆரம்பித்தனர். கெளதம புத்தர் வாழ்ந்த காலத்தில் வேப்பமரக் குச்சிகளை பல்
துலக்கப் பயன்படுத்தும் அளவிற்கு சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தில்
வளர்ச்சியடைந்திருந்தனர் என்று தெரிவிக்கிறது வரலாறு. பின்பு கி.மு ஐந்தாம்
நூற்றாண்டில் சில வணிகர்களின் வாயிலாக இந்தியர்களிடமிருந்து பல் துலக்கும்
பழக்கம் சீன மற்றும் எகிப்திய மக்களை எட்டியது. சில நூற்றாண்டுகள் வரை
சாம்பலைப் பயன்படுத்திய எகிப்தியர்கள், அன்றாடம் பல் துலக்குவதற்கு சாம்பல் உகந்தது அல்ல என்பதை விரைவிலேயே அறிந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, உப்பு, புதினா இலை, ஐரிஸ் மலர், மிளகு ஆகியவற்றுடன்
இருபது வகை தானியங்களைச் சேர்த்து பொடியாக்கி கி.பி நான்காம் நூற்றாண்டில்
உலகின் முதல் பற்பொடியைத் தயாரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர்
எகிப்தியர்கள்.
அரச
குலத்தினர் மட்டும் பயன்படுத்திய இந்தப் பற்பொடியின் தயாரிப்பு முறை
பற்றிய குறிப்புகள் பாப்பிரசு தாள்களில் எழுதப்பட்டு அவற்றில் சில
பாப்பிரசு தாள்கள் இன்றும் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள
அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : சித்தார்கோட்டை
No comments:
Post a Comment