Thursday, 15 November 2012

1 லிட்டர் சிறுநீரில் 6 மணிநேர மின்சாரம்: நைஜீரிய மாணவிகளின் அரிய கண்டுபிடிப்பு

1 லிட்டர் சிறுநீரில் 6 மணிநேர மின்சாரம்: நைஜீரிய மாணவிகளின் அரிய கண்டுபிடிப்பு
1 லிட்டர் சிறுநீரில் 6 மணிநேர மின்சாரம்: நைஜீரிய மாணவிகளின் அரிய கண்டுபிடிப்பு
லண்டன், நவ.15-

வட நைஜீரியா நாட்டில் உள்ள லாகோஸ் நகரில், அரிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நடைபெற்றது.

‘மேக்கர் பெய்ர்’ நடத்திய இந்த கண்காட்சியில், 4 நைஜீரிய மாணவிகள் கண்டுபிடித்துள்ள 1 லிட்டர் சிறுநீரில் 6 மணி நேரத்திற்கான மின்சாரத்தை தயாரிக்கும் ஜெனரேட்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இவர்கள் கண்டுபிடித்துள்ள எலெக்ரோலைட்டிக் செல்லினுள் சிறுநீரை ஊற்றினால், அதிலிருந்து நைட்ரஜன், தண்ணீர், ஹைட்ரஜன் ஆகியவற்றை இந்த கருவி தனித்தனியாக பிரித்து விடுகின்றது.

இதிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன், வாட்டர் பில்டரில் செலுத்தி தூய்மைப்படுத்தப்படுகிறது. பின்னர் கேஸ் சிலிண்டருக்குள் தூய்மையான ஹைட்ரஜன் அனுப்பப்படுகிறது.

இந்த கேஸ் சிலிண்டர், திரவ போரக்ஸ் (வெண்காரம்) நிரப்பப்பட்ட மற்றொரு சிலிண்டருக்குள் ஹைட்ரஜனை அனுப்புகிறது. இதன் மூலம் ஹைட்ரஜனில் உள்ள ஈரப்பதம் உரிஞ்சப்படுகிறது.

பின்னர், ஜெனரேட்டருக்குள் திணிக்கப்படும் உலர்ந்த ஹைட்ரஜன் வாயு, 6 மணி நேரத்திற்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்கும் எரிபொருளாக செயலாற்றுகின்றது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவிகள் அனைவரும் 15 வயதிற்கும் குறைவானவர்கள். நைஜீரியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வந்த போதிலும், 162 மில்லியன் நைஜீரிய மக்கள் மின்சார இணைப்புகள் இன்றி வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...