Wednesday, 10 October 2012

Catholic News in Tamil - 08/10/12


1. திருத்தந்தை நற்செய்தியை அறிவிப்பதற்கு கடவுளின் அக்கினியை உள்ளத்தில் கொண்டிருந்து அதை உலகில் துணிச்சலுடன் ஏற்றி வைக்க வேண்டும்

2. கர்தினால் ஹான் ஹாங்காங்கில் கத்தோலிக்கரின் நற்செய்திப்பணி 

3. திருத்தந்தை : விசுவாச ஆண்டில் திருச்செபமாலையின் மகத்துவத்தை மீண்டும் கண்டுணருவோம்

4. திருத்தந்தை : திருஅவைக்கு இரண்டு புதிய மறைவல்லுனர்கள்

5. அணுக்க‌திர் வீச்சு அச்ச‌த்தினால் Fukushima ந‌க‌ர் ம‌க்க‌ளை த‌னிமைப்ப‌டுத்தி வைக்கும் நிலை குறித்து ஆயர் கவலை
6.   பிலிப்பைன்ஸில் 40 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர வாய்ப்பு


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை நற்செய்தியை அறிவிப்பதற்கு கடவுளின் அக்கினியை உள்ளத்தில் கொண்டிருந்து அதை உலகில் துணிச்சலுடன் ஏற்றி வைக்க வேண்டும்

அக்.08,2012. கடவுள் திருஅவையில் செயலாற்றுகிறார் என்பதை நற்செய்தி அறிவிப்பாளர்கள் தங்கள் இதயத்தில் அறிந்திருக்க வேண்டும்,கிறிஸ்துவை உலகுக்கு அறிவிப்பதற்குப் பற்றிஎரியும் ஆவலைக் கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்திங்களன்று கூறினார்.
இத்திங்களன்று வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அறையில் திருத்தந்தையின் தலைமையில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வு திருப்புகழ்மாலை செபத்துடன் தொடங்கியது. இச்செபத்தில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தைநற்செய்தியை அறிவிப்பதற்கு கடவுளின் அக்கினியை உள்ளத்தில் கொண்டிருந்து அதை உலகில் துணிச்சலுடன் ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறினார்.
இரண்டாயிரம் ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்த பின்னர் கடவுள் யார்அவர் மனித சமுதாயத்தோடு என்ன செய்கிறார் என்ற பெரிய கேள்வி எப்போதும் பலரின் இதயங்களில் இருக்கின்றன என்றுரைத்த திருத்தந்தைகடவுள் நமக்காக என்ன செய்துள்ளார் என்பதை திருஅவை அறியச் செய்ய முடியும்திருஅவை கடவுள் பற்றிப் பேச முடியும் என்று கூறினார்.
கடவுள்மட்டுமே தமது திருஅவையை உருவாக்க முடியும்கடவுள் செயல்படவில்லையெனில் நமது காரியங்கள் நமது காரியங்களாக மட்டுமே இருக்கும்கடவுள் பேசினார்அவர் பேசுகிறார்அவர் நம்மை அறிந்திருக்கிறார்அவர் நம்மை அன்பு செய்கிறார் என்பதற்குத் திருஅவை சான்று பகர முடியும் என்றும் திருத்தந்தை  கூறினார்.
நற்செய்தி என்பது கடவுள் தமது மௌனத்தைக் கலைத்துள்ளார் என்று அர்த்தமாகும் என்றும் கூறினார் அவர்.
இந்த உலக ஆயர்கள் மாமன்றம் ஒவ்வொரு நாளும் செபத்தோடு தொடங்குகிறது என்றால் எந்த முயற்சியும் எப்போதும் கடவுளின் செயலாக இருக்கின்றதுஎனவே நாம் கடவுளோடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் சென்னை-மயிலைப் பேராயர் சின்னப்பா உட்பட 262 மாமன்றத் தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். வல்லுனர்கள்பார்வையாளர்கள்மொழிபெயர்ப்பாளர்கள் என மொத்தம் 408 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

2. கர்தினால் ஹான் ஹாங்காங்கில் கத்தோலிக்கரின் நற்செய்திப்பணி 

அக்.08,2012. மேலும், இத்திங்களன்று தொடங்கியுள்ள 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் பொது அமர்வில் முதலில் உரையாற்றிய இம்மாமன்றத் தலைவர் பிரதிநிதி ஹாங்காங் ஆயர் கர்தினால் John Tong Hon1997ம் ஆண்டில் சீனாவிடம் திரும்புவதற்கு முன்னர்,கம்யூனிச ஆட்சியால் ஹாங்காங்கின் இறையாண்மை அந்நகரில் சந்தித்த நெருக்கடி குறித்து விளக்கினார்.
நெருக்கடி என்ற சொல் சீன மொழியில் ஆபத்துவாய்ப்பு ஆகிய இரண்டு பண்புகளால் குறிக்கப்பட்டுள்ளது என்றும்பாதுகாப்பற்ற நெருக்கடியை அனுபவித்த கத்தோலிக்கரல்லாத மக்களும் தலத்திருஅவையிடம் ஆன்மீக ஆறுதலுக்கு வந்தனர் என்றும் கர்தினால் ஹான் விளக்கினார்.
இந்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தங்களை அழைத்ததற்குத் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்த கர்தினால்ஆதிக் கிறிஸ்தவ சமூகத்தில் விளங்கிய கோட்பாடுபல்வேறு நிலைகளில் ஒன்றிப்புசேவை ஆகிய மூன்று பண்புகள் ஹாங்காங்மக்காவோ மற்றும் சீனாவில் கத்தோலிக்கரிடையே வெளிப்படுவதையும் விளக்கினார். இன்னும்இந்த ஆயர்கள் மாமன்றத்தில் உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச்சும் விரிவான அறிக்கை சமர்ப்பித்தார்.
12 மற்றும் 13வது ஆயர்கள் மாமன்றங்களுக்கு இடையே இடம்பெற்ற நடவடிக்கைகள்13வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புகள்உலக ஆயர்கள் மாமன்றச் செயலகத்தின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பேராயர் எத்ரோவிச் விரிவான அறிக்கை சமர்ப்பித்தார்.

3. திருத்தந்தை : விசுவாச ஆண்டில் திருச்செபமாலையின் மகத்துவத்தை மீண்டும் கண்டுணருவோம்

அக்.08,2012. அன்னைமரியின் செபப் பள்ளியான திருச்செபமாலையின் மகத்துவத்தை மீண்டும் கண்டுணருமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் உலகெங்கும் வாழும் அனைத்து விசுவாசிகளுக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை ஆரம்பித்து வைத்த திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை,திருச்செபமாலையின் அரசியாக இஞ்ஞாயிறன்று(அக்.07) நாம் சிறப்பிக்கும் செபமாலை அன்னையிடம் செபிப்போம் எனக் கூறினார்.
செபமாலை அன்னை விழாவாகிய அக்டோபர் 7ம் தேதியன்று பொம்பைத் திருத்தலத்தில் பாரம்பரியமாக அன்னையிடம் மக்கள் செபிக்கின்றனர்இச்செபத்தோடு நாமும் நம்மை ஆன்மீகரீதியில் ஒன்றிணைப்போம் என்றும் அவர் கூறினார்.
தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டில் செபமாலை பக்தியை ஒவ்வொருவரும் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்ற திருத்தந்தை,செபமாலையில் கிறிஸ்துவின் மறையுண்மைகளைத் தியானிப்பதன் மூலம் விசுவாசத்தின் எடுத்துக்காட்டான மரியாவால் வழிநடத்தப்பட நம்மை அனுமதிப்போம்இதன்மூலம் ஒவ்வொரு நாளும் நற்செய்தியை நாம் தன்மயமாக்க அன்னைமரி உதவுவார் என்று கூறினார்.
புதிய நற்செய்திப்பணி குறித்த ஆயர்கள் மாமன்றத்துக்காக விசுவாசிகள் செபிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

4. திருத்தந்தை : திருஅவைக்கு இரண்டு புதிய மறைவல்லுனர்கள்

அக்.08,2012. புனித பின்ஜென் ஹில்டெகார்டுபுனித அவிலா ஜான் ஆகிய இருவரையும் திருமறையின் மறைவல்லுனர்கள் என  இஞ்ஞாயிறன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று 13வது ஆயர்கள் மாமன்றத் தந்தையரோடு நிகழ்த்திய திருப்பலியில்,நற்செய்திப்பணியில் புனிதர்கள் உண்மையான செயல்பாட்டாளர்கள்இவர்கள் தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால் புதிய நற்செய்திப்பணிக்கு முன்னோடிகளாய் இருக்கின்றார்கள் என்று கூறினார் திருத்தந்தை.
கலாச்சாரசமூகஅரசியல் அல்லது சமய எல்லைகளுக்குப் புனித வாழ்வு உட்பட்டதல்ல என்றும்இப்புனித வாழ்வின் அன்பு மற்றும் உண்மையின் மொழிநன்மனம் கொண்ட அனைவராலும் புரிந்துகொள்ளப்படுகின்றதுஇது புதிய வாழ்வின் தளராத ஊற்றாகிய இயேசு கிறிஸ்துவிடம் அவர்களை இட்டுச்செல்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
கடந்த காலத்தின் மறைபோதகத் தளங்களிலும், தற்போது கிறிஸ்தவர் அல்லாதவர்கள் வாழும் இடங்களிலும் தாராள உள்ளத்தோடு மறைப்பணியாற்றியவர்கள் மத்தியிலிருந்து புனிதர்கள் மலர்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
பெனடிக்ட் சபைத் துறவியாகிய புனித பின்ஜென் ஹில்டெகார்டு(1098-1179)ஓர் அறிவுக்களஞ்சியம். இவர் ஓர் இறைவாக்கினர்,இசையமைப்பாளர், அறிவியலாளர்மெய்யியலாளர்இறையியலாளர்தியானயோகிஎழுத்தாளர்புனித பெர்னார்டின் நண்பர்கிறிஸ்து மற்றும் திருஅவைமீது மிகுந்த பற்றுறுதியுடன் செயல்பட்டவர்.
புனித அவிலா ஜான்(1499-1569)  அப்போஸ்தலிக்கப் பணியில் செபத்தை இணைத்தவர். போதிப்பதில் காலத்தைச் செலவழித்தவர். குருத்துவ மாணவர்களை உருவாக்கும் பயிற்சியை மேம்படுத்தியவர்.
இவ்விரு புதிய மறைவல்லுனர்களுடன் கத்தோலிக்கத் திருமறையில் 35 பேர் மறைவல்லுனர்கள்.

5.   அணுக்க‌திர் வீச்சு அச்ச‌த்தினால் Fukushima ந‌க‌ர் ம‌க்க‌ளை த‌னிமைப்ப‌டுத்தி வைக்கும் நிலை குறித்து ஆயர் கவலை

அக். 102012. ஜப்பானில் கடந்த ஆண்டு அணுஆலை விபத்து  மூலம் பாதிக்கப்பட்ட Fukushima ந‌க‌ர் ம‌க்க‌ள் ஏனைய‌ அந்நாட்டு ம‌க்க‌ளால் அச்ச‌த்தின் கார‌ணமாக‌ ஒதுக்கி வைக்க‌ப்ப‌டுவ‌தாக‌ க‌வ‌லையை வெளியிட்டார் அப்ப‌குதி ஆய‌ர் ஒருவ‌ர்.
அணுக்க‌திர் வீச்சு ப‌ர‌வ‌லாம் என்ற‌ அச்ச‌த்தின் கார‌ணமாக‌ ஜ‌ப்பானின் ஏனைய‌ ப‌குதி ம‌க்க‌ள் Fukushima ந‌க‌ர் ம‌க்க‌ளைச‌மூக‌ ம‌ற்றும் பொருளாதார‌ ரீதியாக‌ த‌னிமைப்ப‌டுத்தி வைக்கும் நிலை ஏற்ப‌ட்டுள்ள‌தாக‌க் கூறினார் Sendai ஆய‌ர் Martin Tetsuo Hiraga
ஜப்பான் முழுமைக்கும் மின்சாரம் வழங்கி வந்த Fukushima அணுமின் நிலையம் விபத்துக்குள்ளாகியதால் தங்கள் பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது ஏனைய பகுதி மக்களால் ஒதுக்கி வைக்கப்படும் நிலைகளையும் இம்மக்கள் அனுப‌விக்க வேண்டியிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்றார் ஆயர்.
அணுக்கதிர் ஆலைகள் கட்டப்படும்போதே ஆதரவாளர்கள்எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவுகள் உருவாவதுடன்,  பணிபுரிவோர் அணுக்கதிர் வீச்சுக்கு உள்ளாகும் ஆபத்தும் உள்ளது என்ற ஆயர்Fukushima வில் பாதிப்புக்கு உள்ளான மக்கள் வெளி நகர் பள்ளிகளில் பயில ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி இடம்பெற்ற சுனாமி மற்றும் அது தொடர்பான அணுஆலை விபத்தில் 19 ஆயிரம்பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

6.   பிலிப்பைன்ஸில் 40 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர வாய்ப்பு

அக். 102012. பிலிப்பீன்ஸ் நாட்டின் இசுலாமிய போராளிக்குழு அமைதி உடன்படிக்கைக்கு இசைவு தெரிவித்துள்ளதன் மூலம் அந்நாட்டில் தொடர்ந்து வந்த 40 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
பிலிப்பீன்ஸில் தனியாட்சி கோரி போராடி வந்த இசுலாமிய சுதந்திர முன்னணி (MILF) எனப்படும்  இப்புரட்சிக்குழுவின் விண்ணப்பத்தை ஏற்றுபுதிய சுயாட்சிப் பகுதி ஒன்றை பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் அமைத்துக்கொடுப்பதற்கு அரசுத் தலைவர் பெனினோ அகுயினோ இசைவு தெரிவித்ததையடுத்து இந்த அமைதி உடன்படிக்கை எட்டப்படவுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் தலைநகர் மணிலாவில் கையெழுத்திடப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இராணுவத்திற்கும்இப்புரட்சிக்குழுவுக்கும் இடையில் நடைபெற்று வந்த மோதலில் சுமார் 1,20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...