An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Wednesday, 16 October 2024
கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டிய திருஅவை
கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டிய திருஅவை
கலாச்சாரங்களுக்கும் திருஅவைக்கும் இடையேயான தொடர்பு என்பது ஒருவருக்கொருவர் கொடைகளைப் பரிமாறிக்கொள்ளும் சிறந்த வழிமுறை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தான் வாழும் இடத்திலும் கலாச்சாரத்திலும் ஆழமாக வேரூன்றாத திருஅவை பிறரால் புரிந்துகொள்ளப்படுவது சிரமம் என அக்டோபர் 15, செவ்வாய்க்கிழமையன்று உலக ஆயர் மாமன்றக் கூட்டத்தில் உரையாற்றினார் கர்தினால் Jean-Claude Hollerich.
ஆயர் மாமன்றத்தின் பொது அறிக்கையாளர் கர்தினால் Hollerich அவர்கள், திருஅவையும் கலாச்சாரமும் குறித்து ஆயர் மாமன்ற வழிமுறை ஏட்டின் நான்காவது பகுதியை அறிமுகப்படுத்தி உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
இடங்கள், கலாச்சாரங்களுக்கும் தலத்திருஅவைகளுக்கும் இடையேயான தொடர்பு குறித்து எடுத்துரைத்த கர்தினால், கலாச்சாரங்களுக்கும் திருஅவைக்கும் இடையேயான தொடர்பு என்பது ஒருவருக்கொருவர் கொடைகளைப் பரிமாறிக்கொள்ளும் சிறந்த வழிமுறை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தலத்திருஅவைகளுக்கும் அகில உலக திருஅவைக்கும் இடையேயான உறவுகள் குறித்தும், தலத்திருஅவைகளுக்கு இடையே நிலவ வேண்டிய உறவு மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார் கர்தினால் Hollerich.
இன்றைய திருஅவையை மேலும் செயல்பாடுடையதாக மாற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை எடுத்துரைத்த கர்தினால், ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள், தாங்கள் வாழும் இடத்திலுள்ள இறைமக்களின் தேவைகள் மற்றும் வாழ்விலிருந்து அனைத்தும் துவக்கப்பட வேண்டும் என்பதை திருத்தந்தையின் செயல்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன என மேலும் கூறினார்.
இரஷ்யா-உக்ரைன் இடையே அமைதிக்கான புதிய முயற்சி
இரஷ்யா-உக்ரைன் இடையே அமைதிக்கான புதிய முயற்சி
உக்ரைனில் அமைதிக்கான பாதையைக் காணவும், உக்ரேனிய குழந்தைகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கவும், போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும் திருஅவையின் முயற்சி
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
உக்ரைனில் அமைதிக்கான பாதையைக் காணவும், உக்ரேனிய குழந்தைகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கவும், போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும் இத்தாலிய கர்தினால் Matteo Zuppi அவர்கள், திருத்தந்தையின் சார்பில் அப்பகுதிக்கான தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான கூடுதல் முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று திருப்பீட செய்தித் துறை இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் உக்ரைன் நாட்டிற்குச் சென்று தனது அமைதி பயணத்தைத் தொடங்கிய கர்தினால் அவர்கள், உக்ரேனிய குடியரசுத் தலைவர் Volodymyr Zelensky அவர்களையும் மற்றும் பல அரசு அதிகாரிகளையும் சந்தித்தார்.
பின்னர், அதே ஆண்டில் ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் இரஷ்ய நாட்டிற்குச் சென்று ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் முதுபெரும் தந்தை Kirill அவர்களுடன் இணைந்து, இரஷ்ய அரசுத் தலைவரின் உதவியாளரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான Yuri Ushakov அவர்களையும், குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் Maria Lvova-Belova உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் சந்தித்தார்.
மேலும், ஜூலை 17,18,19 ஆகிய தேதிகளில் 2023 ஆம் ஆண்டு வாஷிங்டன் சென்று, அமெரிக்க குடியரசுத் தலைவர் Joe Biden அவர்களை சந்தித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கடிதத்தை வழங்கினார்.
2023 செப்டம்பர் 13,14,15 தேதிகளில் பெய்ஜிங் சென்ற கர்தினால் சுப்பி அவர்கள் ஐரோப்பா மற்றும் ஆசியா விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி Li Hui அவர்களைச் சந்தித்தார்.
Bologna உயர்மறைமாவட்டத்தின் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் Matteo Maria Zuppi அவர்களை, 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் அமைதிக்கான தனது சிறப்புத் தூதராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 15 October 2024
Pope: Respect UN peacekeepers in Lebanon
Pope: Respect UN peacekeepers in Lebanon
After the Israeli army fires at UN peacekeeping forces in southern Lebanon, the Pope calls for the troops to be respected.
By Joseph Tulloch
Following a series of recent incidents in which at least four UN peacekeepers were wounded after coming under fire from the Israeli army, Pope Francis has appealed for the troops to be "respected."
The appeal came as the Pope once again called for an immediate ceasefire in the Middle East, urging the parties to "pursue the paths of diplomacy and dialogue to achieve peace".
Pope Francis has been calling for a stop to hostilities in the region since October 2023, longer than almost any other world leader.
“War is an illusion,” the Pope continued, “It will never bring peace, it will never bring security. It is a defeat for everyone, especially for those who believe themselves invincible.”
“I pray for all the victims,” he added, “for the displaced, for the hostages - who I hope will be released immediately – and I pray that this great needless suffering, generated by hatred and revenge, will soon come to an end.”
Ukraine, Haiti, and prayers for peace
Pope Francis then moved on to discuss the war in Ukraine, appealing that “Ukrainians not to be left to freeze to death” this coming winter.
He called emphatically for a stop to air strikes against the civilian population: “No more killing of innocents!”.
The Pope then turned to Haiti, where extreme gang violence and grinding poverty are continuing to claim many lives. Last week, around 70 people, including children, were killed after an armed gang attacked a small town there.
“Let us never forget our Haitian brothers and sisters”, the Pope urged. “I ask everyone to pray for an end to all forms of violence and, with the commitment of the international community, to continue working to build peace and reconciliation in the country”.
Finally, the Pope discussed the upcoming “One Million Children Praying the Rosary for Peace” event organised by Aid to the Church in Need.
“We entrust to Our Lady’s intercession,” Pope Francis said, “tormented Ukraine, Myanmar, Sudan, and all other peoples suffering from war and all forms of violence and misery.”
Cardinal Hollerich: Church is rooted in places and cultures
Cardinal Hollerich: Church is rooted in places and cultures
The Synod’s General rapporteur, Cardinal Jean-Claude Hollerich, presents the third part of the Instrumentum laboris, “Places,” as participants begin their reflection on the final module of the General Assembly.
By Christopher Wells
With the General Assembly of the Synod entering its third week, Cardinal Jean-Claude Hollerich encouraged participants to not give in to fatigue.
The General rapporteur’s introduction to the fourth module – on the third and final part of the Instrumentum laboris – emphasized the need to engage the work “with the same decision and energy” that has characterized the Assembly so far.
A Church rooted in places and cultures
Cardinal Hollerich noted that this module is focused on “Places,” with the fundamental idea that “the Church cannot be understood without being rooted in a place and a culture (IL, 80).
Carefully explaining each section of this part of the IL, Cardinal Hollerich noted that now, more than in the past, the idea of place “has much less of a spatial and geographic connotation than in the past, not least due to globalism and the new digital reality. He asked synod participants to consider what this means for the Church’s mission, and how we should “rethink” the organizational forms of the Church.
The following paragraphs, Cardinal Hollerich said, deal with the relationships established between places and cultures, and especially among the various local Churches, including the Eastern Catholic Churches. Within the Church, these relationships have the character of a mutual exchange of gifts. He also noted the relationships that exist between the local Churches and the universal Church, and within each local Church.
The service of the Pope
Finally, he said, this final module is set to consider “the service of unity of the Bishop of Rome,” the Pope. Cardinal Hollerich said he interprets Pope Francis to be inviting the Synod participants to approach this exchange in the spirit of “parrhesia,” or frankness, with a view to offering advice on how to make the service of the Pope and the Roman Curia “more effective today.” The Pope, he said, “is entitled to what we truly think, beginning with the life and needs of the People of God in the places we come from.”
The lived experience of synod participants
While the topics of this module might seem technical or of interest only to insiders, the Cardinal said he hoped that Wednesday’s theological-pastoral fora, open to everyone, might help to dispel this impression.
In conclusion, Cardinal Hollerich expressed his opinion that this module, like those that have come before, engages “the lived experiences” of the participants in the General Assembly. “It seems to me,” he said, “that this is the most correct perspective in which to place ourselves to face the work ahead of us.”
மறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதம்
மறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதம்
நமது ஒருங்கிணைந்த பயணத்தின் நோக்கமான, “ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்பவை, இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பதை தங்களது முதல் பணியாகக் கொண்டுள்ளதை நினைவுபடுத்துகின்றன
மெரினா ராஜ் - வத்திக்கான்
மறைப்பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில் கிறிஸ்துவை நமது வாழ்வின் மூலைக்கல்லாக மாற்றுவதற்கு தூய ஆவியின் ஆற்றலை வேண்டுவோம் என்று குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 14 திங்கள்கிழமை தனது X வலைதளப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் # மறைப்பணி மாதம் அக்டோபர் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
மறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில் கிறிஸ்துவை நமது வாழ்வின் மூலைக்கல்லாக மாற்றுவதற்கும், அவர் நமக்கு தரும் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு, மகிழ்வின் சான்றுகளாக நாம் திகழ்வதற்கும் தூய ஆவியின் அருளினை வேண்டுவோம் என்பதே திருத்தந்தையின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
அக்டோபர் மாதம் 20 ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட இருக்கின்ற உலக மறைப்பணி தினத்திற்கான செய்தியை, “எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” என்ற விவிலிய வார்த்தைகளுடன் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘போய் அழைத்துவாருங்கள்’,‘எல்லாரையும்’,‘திருமணவிருந்துக்கு’, என்ற மூன்று வார்த்தைகளுக்கும் தனித்தனியாக தனது மறைப்பணி ஞாயிறுக்கான செய்தியில் விளக்கமளித்துள்ளார்.
நம் ஒன்றிணைந்த பயணத்தின் நோக்கமான, “ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்பவை இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பதை தன் முதல் பணியாகக் கொண்டுள்ளதை நினைவுபடுத்தி நிற்கின்றன என்றும் தனது செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அணுசக்தி எதிர்ப்பு அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
அணுசக்தி எதிர்ப்பு அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை விளம்பரப்படுத்தவும், அணு ஆயுதங்களை ஒழிக்க வலியுறுத்தவும் ஜப்பானிலும் உலகெங்கிலும் பல ஹிபாகுஷா அமைப்புகள் அல்லது அமைதிவாத நடவடிக்கைகள் உள்ளன.
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமைதிக்கான நோபல் பரிசானது நிஹான் ஹிடாங்கியோ என்ற அணுசக்தி எதிர்ப்பு அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நாகசாகி உயர்மறைமாவட்ட பேராயர் ஜோசப் மிட்சுவாகி டகாமி.
அமைதிக்கான நோபல் பரிசு பற்றி வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின்போது இவ்வாறு வாழ்த்து தெரிவித்த பேராயர் ஜோசப் மிட்சுவாகி அவர்கள், அணு ஆயுந்தங்கள் இல்லாத உலகத்தை விரும்பும் மக்கள் அனைவருடனும், அதற்காக கவனம் செலுத்துவதில் முக்கியத்துவம் செலுத்துவதை அங்கீகரித்த நோபல் பரிசுக்குழுவினருக்கு தன் நன்றியினைத் தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார்.
மிகப்பெரிய ஹிபாகுஷா அமைப்பான நிஹான் ஹிடான்கியோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது, அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, அணுசக்தி தடுப்பு மற்றும் அமைதியின் அவசியத்தைக் கூறும் குடிமக்களின் மனநிலையை மாற்ற வலுவான உத்வேகத்தை அளிக்கும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.
ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் ஜோசப் மிட்சுவாகி அவர்கள், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை விளம்பரப்படுத்தவும், அணு ஆயுதங்களை ஒழிக்க வலியுறுத்தவும் ஜப்பானிலும் உலகெங்கிலும் பல ஹிபாகுஷா அமைப்புகள் மற்றும் அமைதிவாத நடவடிக்கைகள் உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.
நியூ மெக்சிகோவின் தூய ஃபே உயர்மறைமாவட்ட பேராயர், ஜான் வெஸ்டரின் முயற்சியால், தூய ஃபே, சாட்டில், நாகசாகி, ஹிரோசிமா ஆகிய மறைமாவட்டங்கள் இணைந்து அணு ஆயுதம் இல்லாத சங்கத்தை உருவாக்கின என்றும், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று நாகசாகிய தலத்திருஅவையில் இந்த இயக்கமானது தலத்திரு அவை மற்றும் சிவில் ஆகிய இரண்டிலும் திறக்கப்பட்டது என்றும் கூறினார் பேராயர் மிட்சுவாகி.
அக்.16. உலக உணவு தினம்
அக்.16. உலக உணவு தினம்
வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். அதுமட்டுமன்றி, உணவு மீந்துவிட்டால் பசியால் வாடும் மக்களுக்கு தானமாக அளிக்கலாம்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்பு நெஞ்சங்களே, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதியை உலக உணவு தினமாகச் சிறப்பிக்கின்றோம். இவ்வாண்டு, அதாவது 2024ஆம் ஆண்டு, ‘நல்லதொரு வாழ்வுக்கும் நல்லதொரு வருங்காலத்திற்கும் உணவுக்கான உரிமையைக் கொண்டிருத்தல்’ என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசி, பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. மேலும், பசியை எதிர்த்துப் போராடுவதும் இதன் நோக்கங்களுள் ஒன்று. இது தவிர, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவு ஏற்றுமதி, இறக்குமதி துறையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தொடங்கப்பட்ட நாளே, 1979லிருந்து உணவு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1981ஆம் ஆண்டு முதல், உலக உணவு தினம் ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது.
உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார். 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர்.
உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான உணவை விவசாயிகள் தயாரித்து தந்தாலும், பசி என்பது இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. உலகில் 73 கோடியே 30 இலட்சம் பேர் இன்னும் பசியால் வாடிக்கொண்டிருக்கின்றனர். கால நிலை மாற்றங்கள், மோதல்கள், பொருளாதார வீழ்ச்சி, சரிநிகரற்ற தன்மை, தொற்று நோய்கள் என காரணங்களை அடுக்கிக்கொண்டேச் சென்றாலும், உணவை உற்பத்திச் செய்யும் விவசாயியும் ஏழ்மையில் உழல்வதுதான் புரியாத புதிராக உள்ளது.
உலகில் மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர் என்பவைகளுக்கு அடுத்து உணவு வருகிறது. தேவையான அளவு உணவை கொள்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. உணவுக்கான உரிமை பன்னாட்டு அரசுகளால் மனித உரிமைகள் ஒப்பந்தத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய பத்து விழுக்காட்டினர் இன்றும் பசியின் கோரப்பிடியிலேயே உள்ளனர். ஆம், ஒவ்வொரு நாளும் ஐந்துக்கு ஒருவர் பசியால் உறங்கச் செல்கின்றனர். இந்த உலகில் 35 விழுக்காட்டு மக்கள், அதாவது, 280 கோடி பேர் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கான வசதியற்றவர்களாக இருக்கின்றனர். குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 71.5 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை பெறுவதற்கான வசதிகளின்றி உள்ளனர். அதேவேளை, வருமானம் நிரம்பிய நாடுகளிலோ 6.3 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்குவதற்கான வசதிகளின்றி உள்ளனர். உலகில் பசிக்கொடுமைகள் பற்றி இவ்வாண்டு வெளியிடப்பட்ட அறிக்கை, பசியால் அதிக அளவில் வாடும் நாடுகளாக 36 நாடுகளை குறிப்பிட்டுள்ளது. அதிலும் 6 நாடுகளை, அதாவது புருண்டி, சாடு, மடகாஸ்கர், சொமாலியா, தென்சூடான், மற்றும் ஏமனை மிகவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை உள்ள நாடுகளாக, அதாவது பசியால் மக்கள் துயருறும் நாடாக அறிவிக்கிறது.
2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் பசியால் துயருறும் மக்களின் எண்ணிக்கை 15 கோடியே 20 இலட்சம் அதிகரித்துள்ளது. உலகில் 13 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் பஞ்சத்தில் அல்லது பஞ்சத்தை ஒத்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இது மட்டுமா? உலகில் இறக்கும் குழந்தைகளுள் பாதிபேர் சத்துணவின்மையால் உயிரிழக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பசி தொடர்புடையவைகளால் உயிரிழக்கும் 90 இலட்சம் பேரில் பெரும்பான்மையினோர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள். ஏழ்மையும் பசியும் ஆப்பிரிக்காவில்தான் தங்கள் வசிப்பிடத்தை அதிக அளவில் கொண்டுள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் எவரும் பசியால் வாடாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என ஐ.நா. நிறுவனம் திட்டமிட்டு செயலாற்றிவருவது நிறைவேறாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சஹாராவை அடுத்த ஆப்பிரிக்க நாடுகளைப் பார்க்கும்போதும், தெற்காசிய நாடுகளை நோக்கும்போதும் 2030ன் குறிக்கோளை எட்டுவது சிரமம் என்றுதான் தோன்றுகிறது. இங்கு சத்துணவின்மை, குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, இன்னும் 130 ஆண்டுகள் தாண்டி கூட, அதாவது 2160ஆம் ஆண்டில்கூட பசியை எதிர்த்து வெற்றிபெறுவோம் என்பது சந்தேகத்திற்குரியதுதான். ஏனெனில் பசி என்பது அரசியல் மற்றும் காலநிலை மாற்றங்களோடு நெருங்கியத் தொடர்புடையதாக இருக்கின்றது. ஏனெனில், பசி என்பது மோதல்களாலும், கால நிலை மாற்றங்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் கீழ்நிலை அடைந்துள்ளது. உணவு பாதுகாப்பின்மையாலும் சத்துணவின்மையாலும் அதிகம் பாதிக்கப்படுள்ளவர்கள் பெண்களும் சிறுமிகளும்தான். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதில் ஓரளவு முன்னேற்றத்தை இவ்வுலகம் கண்டுவந்தாலும், இது எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
இவ்வுலகில் பசி இன்னும் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் முக்கியக் காரணங்கள் என்னவென்று நாம் ஆராய்ந்து பார்த்தால் அனைத்திற்கும் மேலாக ஏழ்மை முதலில் வந்து நிற்கிறது. ஏழ்மையில் வாடும் குடும்பத்தால் போதிய உணவை, குறிப்பாக சத்துள்ள உணவைப் பெற முடியாது. போதிய உணவில்லையேல் அக்குடும்பத்தின் குழந்தைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனால்தான் சத்துணவுத் திட்டத்தையேக் கொண்டுவந்தார் கர்மவீரர் காமராசர்.
உணவுப் பற்றாக்குறை பிறிதொரு காரணமாக உள்ளது. பல ஏழை நாடுகளில் முந்தைய ஆண்டின் சேமிப்பு பயன்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு அறுவடைக்கு இடைப்பட்ட காலத்தில் விலைவாசிகள் உயர்ந்து, மூன்றுவேளை உணவில் ஒருவேளையை சில குடும்பங்கள் தியாகம் செய்யும் நிலை உருவாகும். இது தவிர, கோவிட் பெருந்தொற்று காலத்தின்போதும், தற்போதைய உக்ரைன் போர்க்காலத்தின் துவக்கத்திலும் இதைத்தான் கண்டோம். போர் மற்றும் மோதல்களின்போதும் மக்கள் பசியால் வாடுவதும் தொடர்கின்றது. ஓர் உதாரணத்திற்கு இரஷ்யா-உக்ரைன் போரை எடுத்துக் கொள்வோம். போருக்கு முன்னர் உலகின் கோதுமை தேவையில் 25 விழுக்காட்டை இவ்விரு நாடுகளும் தான் நிறைவுச் செய்தன, அதாவது ஏற்றுமதிச் செய்தன. ஆனால், இன்றோ அந்த சங்கிலி அறுபட்டு, கோதுமை பற்றாக்குறையும், விலையேற்றமும் இடம்பெற்றுள்ளன. இதனால் ஏழை நாடுகளில் பசியின் பிடி இறுக்கமாகியுள்ளது.
காலநிலை மாற்றம், இன்னொரு காரணமாக உள்ளது. உலகம் வெப்பமாகி வருவதும், இயற்கை பேரிடர்களும் பசியின் கொடுமைக்கு இன்னும் வலுசேர்த்துள்ளன. இது தவிர திட்டமிடாத அரசின் செயல்கள், அரசியல் நிலையற்றதன்மை, மோசமான பொருளாதாரம், உணவை வீணாக்குதல், பாலின பாகுபாட்டு முறைகள், கட்டாயப்படுத்தப்படும் புலம்பெயர்வுகள் என பல காரணங்களால் உலகில் பசி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
வட கொரியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, லைபீரியா, நிஜர், ஹெய்ட்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, மடகாஸ்கர், சாடு, ஏமன், சொமாலியா போன்ற நாடுகள் உலகில் பசியை அதிக அளவில் அனுபவித்துவரும் நாடுகள். நமது பூமி இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க போதுமான உணவை உருவாக்குகிறது. இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் 130 கோடி கிலோ உணவு இழக்கப்படுகிறது அல்லது வீணாகிறது. இது மொத்த உணவு உற்பத்தியில் ஏறக்குறைய 20%.
உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரே நாளில் மீட்டுவிட முடியாது. ஆனால், முடிந்தவரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும். முதலில் தாங்கள் உண்ணும் உணவை வீணாக்குவதைத் தவிர்க்கலாம். ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என உறுதியாக இருக்கலாம். வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். அதுமட்டுமன்றி, உணவு மீந்துவிட்டால் பசியால் தவிக்கும் மக்களுக்கு தானமாக அளிக்கலாம். தேவைக்கு மட்டும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினால், உணவை வீணாக்குவதையும், பசியுடன் படுக்கைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். உலக உணவு தினம் என்பது அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முடிவுகளை எடுக்கவும் நினைவூட்டுகிறது.
உலகில் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய நம்மால் இயன்றதை ஆற்றுவோம். பகிர்தலும், வீணாக்காத மனமும் இருந்தால் போதும், நாமும் இதில் பங்களிக்கலாம்.
Sunday, 13 October 2024
Friday, 11 October 2024
இளம் புனிதராக அறிவிக்கப்பட உள்ள அருளாளர் கார்லோ அகுதீஸ்
இளம் புனிதராக அறிவிக்கப்பட உள்ள அருளாளர் கார்லோ அகுதீஸ்
இருபதாம் நூற்றாண்டின் இளம் புனிதராக அறிவிக்கப்பட உள்ள அருளாளர் கார்லோ அகுதீஸ் அவர்களின் மறைவு நாளானது அக்டோபர் 12 சனிக்கிழமை நினைவுகூரப்பட உள்ளது. இலண்டனில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் பிறந்த கார்லோ அகுதீஸ் அவர்கள் தனது குடும்பத்தாருடன் இத்தாலியின் மிலான் நகருக்குக் புலம்பெயர்ந்தார். வடக்கு இத்தாலியின் மிலான் நகரில் தனது பள்ளிப்பருவத்தையும் இளமைப் பருவத்தையும் அனுபவித்த கார்லோ, திருநற்கருணை மீது ஆழமான பற்று கொண்டவர். தனது இந்த ஆர்வத்தை பக்தியை எல்லாரும் அறிந்துகொள்ளும் பொருட்டு புதிய வலைப்பதிவை ஆரம்பித்து அதில் உலகில் நடந்த எல்லா திருநற்கருணை வழியாக நடைபெற்ற அற்புதங்களைப் பதிவிட்டார். பங்குப்பணிகளிலும் ஆலயப்பணிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வந்த கார்லோ 2001ஆம் ஆண்டு எலும்பு மஞ்சை இரத்தப்புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். புனிதர் பட்ட படிநிலைகளுக்கான ஆய்வு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 மிலான் மறைமாவட்ட அளவில் தொடங்கப்பட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2018ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் நாள் இறை ஊழியராகவும், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று அசிசி நகரில் அருளாளராகவும் உயர்த்தப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக விரைவில் உயர்த்தப்பட இருக்கின்றார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள நிலையில் யூபிலி ஆண்டில் அருளாளர் கார்லோ அகுதீஸ் இரண்டாம் நூற்றாண்டின் இளம்புனிதராக உயர்த்தப்பட உள்ளார்.
தனது 15 வயதிலேயே திருநற்கருணை மீது ஆழமான பற்று கொண்டு பிறரும் அவ்வாறு வாழ தன் வாழ்வால் எடுத்துரைத்த அருளாளர் கார்லோ அகுதீஸ் அவர்கள் பற்றிய கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை ஞானப்பிரகாசம். கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளரான தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள்,. பெங்களூருவில் உள்ள புனித பேதுரு திருப்பீடக் குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றவர். 2018ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்ற தந்தை அவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக கோவை மறைமாவட்ட இளைஞரணி இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். தற்போது கோவை மறைமாவட்டம் தூய மிக்கேல் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி முதுகலை ஆசிரியராக பணிபுரியும் தந்தை அவர்கள், இளைஞர்களை, சமூக, ஆன்மிக, மன, அறிவுசார், உளவியல் பரிமாணங்களை உள்ளடக்கிய முழுமையான புனிதத்தின் பாதையில் வழிநடத்துதலை தனது முதன்மையானப் பணியாக ஆற்றிவருகின்றார். நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம், மறைநூல்கள் மேல் அளவற்ற அன்பு, இளையோர் பணியில் மிகுந்த ஈடுபாடு, பண்ணிசைத்தும் பாட்டிசைத்தும் கடவுளைப் போற்றும் திறன் கொண்ட தந்தை அவர்களை அருளாளர் கார்லோ அகுதீஸ் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
அக்டோபர் 11 அன்று உக்ரைன் அரசுத்தலைவர் - திருத்தந்தை சந்திப்பு
அக்டோபர் 11 அன்று உக்ரைன் அரசுத்தலைவர் - திருத்தந்தை சந்திப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி அக்டோபர் 11 வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்திக்க உள்ளார்.
2023 ஆம் ஆண்டு மே 13 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த ஜெலன்ஸ்கி அவர்கள், 2024 அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை மூன்றாம் முறையாகத் திருத்தந்தையை சந்திக்க உள்ளார்.
உக்ரைன் - இரஷ்யா போர் ஆரம்பித்து ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன் மக்களுக்காக செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு வரும் நிலையில் அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி திருத்தந்தை அவர்களை சந்திக்க இருக்கின்றார்.
குரோவேஸியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கு இடையிலான உச்சிமாநாட்டில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி திருத்தந்தையை சந்திக்க அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை வத்திக்கான் வர உள்ளார்.
2023 ஆம் ஆண்டு மே 13 அன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உள்ள ஓர் அறையில் அரசுத்தலைவர் விளாடிமீருடன் ஏறக்குறைய 40 நிமிடங்கள் உரையாடிய திருத்தந்தை அவர்கள், பொது முறையீடுகள், அமைதிக்கான தொடர்ச்சியான விண்ணப்பங்கள், உக்ரைன் நாட்டிற்காக தனது நிலையான செபம் போன்றவற்றை உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விடுவிக்கப்படல், போர்த்தாக்குதல்கள், வன்முறைகள் போன்ற அனைத்தும் பற்றி திருத்தந்தையுடனான சந்திப்பின்போது பகிர்ந்துகொள்ளப்பட்டது.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் அச்சுறுத்தல் ஐரோப்பாவில் பரவத் தொடங்கியபோது, கிழக்கு உக்ரைனில் மட்டும் போரானது ஓர் அலகை போல உருவாக ஆரம்பித்து இருந்தது. அப்போது முதன்முறையாக அரசுத்தலைவர் விளாடிமீர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தார்.
அன்று முதல் இன்று வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் உக்ரைன் மக்கள் அமைதியை அடையவேண்டும் பிணையக்கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக தனது செபங்களையும், பல்வேறு கடிதங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதனின் மாண்பைப் பாதிக்கும் மரண தண்டனை
மனிதனின் மாண்பைப் பாதிக்கும் மரண தண்டனை
தேவையிலிருப்பவர்களுக்கு உதவாமல், தங்களது சொந்தத் தேவைகளைத் துரத்திக்கொண்டு போகும் வாழ்க்கை எவ்வளவு வெறுமையானது – திருத்தந்தை பிரான்சிஸ்.
மெரினா ராஜ் - வத்திக்கான்
மரண தண்டனை என்பது மனிதனின் மாண்பையும் மீற முடியாத தன்மையையும் பாதிப்படையச் செய்வதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வாழ்வின் கடைசி நிலையிலும் கூட ஒருவர் மனம் மாற முடியும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 10 வியாழனன்று ஹேஸ்டாக் மரணதண்டனை மற்றும் உலக வீடற்றோர் நாள் என்ற தலைப்பில் இரண்டு குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையிலிருப்பவர்களுக்கு உதவாமல் தனது தேவைகளைத் துரத்திக்கொண்டு போகும் வாழ்க்கை எவ்வளவு வெறுமையானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை என்பது மனிதனின் மீற முடியாத தன்மையையும் மாண்பையும் பாதிப்படையச் செய்வதால் எப்போதும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இது ஒழிக்கப்பட வேண்டும் என்றும், வாழ்வின் கடைசி நிமிடம் வரை ஒரு நபர் மனமாற்றம் பெற முடியும் என்பதை நாம் மறந்துவிட முடியாது என்றும் முதல் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
நல்லதைச் செய்வதை விட நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனை பேர் தங்கள் வாழ்நாளைக் கழிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், தேவையிருப்பவர்களைப் பார்க்காமல், நமது சொந்த தேவைகளைத் துரத்தும் வாழ்க்கை எவ்வளவு வெறுமையானது என்று தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.
உடன்பிறந்த உணர்வை நம்மில் உருவாக்கும் விளையாட்டு
உடன்பிறந்த உணர்வை நம்மில் உருவாக்கும் விளையாட்டு
விளையாட்டின் உள்ளார்ந்த மதிப்புகள், நிலைத்தத்தன்மை, நேர்மை, நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை விளையாட்டு முயற்சிகளில் எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்.
மெரினா ராஜ் - வத்திக்கான்
விளையாட்டு உடன்பிறந்த உணர்வை நம்மில் உருவாக்குகின்றது என்றும், கம்பீரமான உயர்ந்த மலைகள் நிறைந்த ஆஸ்திரியா நாடு, பனிச்சறுக்கு விளையாட்டுக்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 10 வியாழனன்று வத்திகானின் கொன்சிஸ்தோரோ அறையில் உலக பனிச்சறுக்கு விளையாட்டு 2025 இல் பங்கேற்க இருக்கும் ஆஸ்திரியாவின் பனிச்சறுக்கு விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 103 பேரை சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1905 இல் நிறுவப்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டிற்கான ஆஸ்திரியா சங்கம், தேசிய அளவில் பல்வேறு பனிச்சறுக்கு நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், குறிப்பாக விளையாட்டு வீரர்களின் சிறந்த செயல்திறனை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விளையாட்டின் உள்ளார்ந்த மதிப்புகள், நிலைத்தத்தன்மை, நேர்மை, நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை விளையாட்டு முயற்சிகளில் எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இதன் வழியாக உடன்பிறந்த உணர்வை விளையாட்டு வீரர்கள் உலகிற்கு அளித்து பங்களிக்கின்றார்கள் என்றும் கூறினார்.
அழகான இயற்கையின் அதிசயங்களுக்கு மத்தியில், படைத்த இறைவனை, ஆஸ்திரியா இயற்கைச்சூழல் புகழ்ந்து பாடுகிறது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், விளையாட்டு வீரர்களை கடவுளின் தூதர்கள் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்து உடன் வரட்டும் என்றும், எளிதான காரியமல்லாத இப்போட்டிகளில் அவர்கள் சிறப்புடன் விளையாட அவர்களுக்காக செபிப்பதாகவும் கூறினார்.
இரத்தன் டாடா மறைவிற்கு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை இரங்கல்
இரத்தன் டாடா மறைவிற்கு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை இரங்கல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான இரத்தன் டாடா தொழில்துறையில் சிறந்து விளங்கியவர் மட்டுமல்ல, கருணை மற்றும் தாராள மனப்பான்மையின் கலங்கரை விளக்கமாக இருந்தவர் என்று தெரிவித்துள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
தலைசிறந்த தொழிலதிபரும், தொலைநோக்குப் பார்வை கொண்டவரும், எதிர்காலத் தலைமுறையினர் மற்றும் சந்ததியினரின் நல்வாழ்விற்காக ஏராளமாகப் பங்களித்தவருமான இந்தியாவின் இரத்தன் டாடா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
அக்டோபர் 9 புதன்கிழமை மாலை இறந்த இந்தியாவின் பிரபல தொழிலதிபரான இரத்தன் டாடா அவர்களின் மறைவைக் குறித்து வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையானது, டாடா அறக்கட்டளைகள் மற்றும் சமுதயாநலனை அடிப்படையாகக் கொண்ட அவரது பல்வேறு விதமான முயற்சிகள் வழியாக இலட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தவர் டாடா என்றும் குறிப்பிட்டுள்ளது.
விளிம்புநிலை மக்களின் நலனுக்காக போராடியவர், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர், சமூகநீதி, கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மக்களுக்கான பணியில் ஆழமான அர்ப்பணிப்பு கொண்டவர் என்றும், அவரது அர்ப்பணமுள்ள வளர்ச்சி கத்தோலிக்க திருஅவையின் முக்கியமான விழுமியங்களான ஏழை மற்றும் பலவீனமானவர்களுக்கு பணியாற்றும் நோக்கத்தை எதிரொலிக்கின்றது என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டை கட்டியெழுப்புவதில் டாடா அவர்களுக்கு இருந்த பங்களிப்பு, உலகப் பொருளாதார சக்தியாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் அவரது பங்கு ஆகியவற்றை நினைவுகூர்ந்துள்ள ஆயர் பேர்வையானது ஏழைகளுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை அவர் ஒருபோதும் இழந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மறைந்த இரத்தன் டாடா அவர்களின் ஆன்மா இறைவனில் நித்திய இளைப்பாற்றி அடைய செபிப்பதாகவும் அவரது மறைவினால் வருந்தும் குடும்பத்தாருக்கு ஆன்மிக ஆறுதலையும் உடனிருப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
Thursday, 10 October 2024
The Holy Spirit expands and unites the Church
The Holy Spirit expands and unites the Church
Pope Francis highlights the Holy Spirit's role in expanding the Church's mission to all peoples while fostering unity from within.
By Francesca Merlo
Addressing the faithful gathered in St Peter's Square for his General Audience on October 9th, Pope Francis reflected on the profound role of the Holy Spirit in the life of the Church.
Reflecting on passages from the Acts of the Apostles in his catechesis, the Holy Father highlighted two primary movements of the Spirit: His power to expand the Church’s reach to all peoples, and His ability to consolidate unity within the Church itself.
Pope Francis began by recounting Pentecost, describing how “they were all filled with the Holy Spirit”, which enabled the Apostles to speak in various languages and proclaim Jesus Christ to the crowds. This miraculous sign, he noted, was not just a display of divine power, but a clear message that the Church's mission is universal. Pope Francis explained that “The Holy Spirit is He who ensures the universality and the unity of the Church".
The Conversion of Cornelius
The Pope then pointed to two key examples from the Acts of the Apostles to highlight how the Spirit "fosters universality". The first was the conversion of Cornelius, which marked a pivotal moment when “the Apostles expanded their horizon” and broke down barriers between Jews and pagans. This, he said, was like a “second Pentecost”, showing that the Spirit's work is ongoing, constantly pushing the Church to embrace new peoples.
Pope Francis also mentioned St Paul’s missionary journey, when the Apostle was initially “forbidden by the Holy Spirit” to preach in Asia Minor and later redirected in a vision to Macedonia. This episode illustrates that the Spirit not only promotes ethnic expansion but also “geographical expansion,” said the Pope, guiding the Church to proclaim the Gospel in new lands.
The Council of Jerusalem
The second movement of the Holy Spirit, Pope Francis continued, is His work in creating and safeguarding unity. He pointed to the Council of Jerusalem, where the Apostles and early Christians debated whether Gentile converts should follow the Mosaic Law. The solution, announced with the words, “It has seemed good to the Holy Spirit and to us”, was the result of dialogue, prayer, and discernment, said the Pope. In light of this, Pope Francis noted, the Spirit “does not always create unity suddenly, with miraculous and decisive actions,” but often works in “a discreet manner,” respecting human processes and differences, “in a synodal manner.”
The Holy Spirit is like the soul of the Church
The Holy Father then recalled the words of St Augustine, who compared the Holy Spirit to the soul of the Church, saying, "how the soul is of the body of man, so the Holy Spirit is of the body of Christ, which is the Church.” This, Pope Francis explained, underscores that the Spirit does not create unity externally or by command. Rather, “He Himself is the bond of unity” within the Church.
Bringing his catechesis to a close, Pope Francis invited the faithful to apply this lesson in their personal lives, noting that “Christian unity is built not by waiting for others to reach us where we are, but by moving together towards Christ.” This, he noted, applies not only to the Church as a whole but also to everyday relationships, within marriages, families, and communities.
Finally, Pope Francis asked the faithful gathered to pray for the Holy Spirit's help in becoming “instruments of unity and peace,” both within the Church and in the world.
Prayers for peace
Legacy of Pope Pius XII lives on 66 years after his death
Legacy of Pope Pius XII lives on 66 years after his death
About 80% of the Jews in Rome survived the Holocaust due to the Pope’s efforts—more than anywhere else under Nazi occupation. On the 66th anniversary of his death, Vatican News looks back at the Pope's legacy.
By Kielce Gussie
In 1939, the 260th successor of St. Peter was elected. Not only would he face the challenge of leading the Church, but also the horrors of the second World War. And his response would be remembered for decades. This man was Pope Pius XII.
Starting in the Vatican
Eugenio Pacelli was born in Rome on March 2, 1876. At 23, he was ordained to the priesthood and began his work in what would become a long career at the Vatican. Pacelli served as a clerk in the Secretariat of State, then as Nuncio to Germany, where he brokered agreements between Bavaria and Prussia.
In 1929, Pope Pius XI created him a cardinal. 10 years later, in a brief one-day conclave, Pacelli was elected Pope and chose the name Pius XII.
A Pope in challenging times
World War II broke out six months after Pope Pius XII began his 19-year papacy. He used his diplomatic background to respond to the violence and published his first encyclical, “Summi Pontificatus,” which called for prayer to end the war. This was just the beginning of his mission of peace during the world war.
German historian, Dr. Michael Hesemann, said Pope Pius XII “did more to save Jews and to stop the killings than any politician or religious leader of his time.” Since 2009, Dr. Hesemann has studied the Vatican Archives and has refuted the idea the Pope had remained silent and uninvolved. Rather, Pope Pius XII spoke about the treatment of the Jews in three public speeches. In 1939, he petitioned for 20,000 visas for German Jews to escape the Nazis but he only received less than 10,000.
Throughout the six-year war, the Pope worked clandestinely to protect the Jewish people. He understood that speaking out publicly against the Nazis could lead to greater violence and persecution. “Every word that we addressed to the responsible authorities and every one of our public declarations,” he said, “had to be seriously weighed and considered in the interest of the persecuted themselves in order not to make their situation unwittingly even more difficult and unbearable.”
A modern approach to the war
The second pontiff to use the radio, Pope Pius XII delivered almost 200 radio speeches in different languages to speak out against the violence and promote peace. Additionally, he wrote a number of documents, including 41 encyclicals.
Silence broken
At a special audience at the Vatican on November 29, 1945, 80 delegates from German concentration camps personally thanked Pope Pius XII for his words and actions taken during the Nazi regime.
In 2020, Pope Francis opened an archive of documents relating to Pope Pius XII and his relations with the Jewish people during World War II. As a result, the work of this “silent” pontiff was uncovered. 16 million pages recount the difficult period of world history. These documents reveal that more than 4,200 Jews were hidden in convents and monasteries and 160 in Vatican City. Thanks to Pope Pius XII and other Church members, 80% of the Jews in Rome survived the Nazi occupation—more than anywhere else.
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...