கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலக அளவில், 130 பெண்களில் ஒருவர், நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று, அண்மையில் ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலகெங்கிலும் குறைந்தது 2 கோடியே 90 இலட்சம் பெண்கள், மற்றும் சிறுமிகள், நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறும் இந்த ஐ.நா அறிக்கை, நவீன அடிமைத்தனம் என்பது, பெரும்பாலும், பாலியல் வன்முறைகள், கட்டாயத் திருமணங்கள், கடனால் உருவானக் கொத்தடிமை, கட்டாய உழைப்பு, உள்நாட்டு அடிமைத்தனம் ஆகியவற்றை உள்ளடக்கியது எனவும் உரைக்கிறது.
பல நாடுகளில், பெண் குழந்தைகள், மற்றும் பெண்களுக்கு, பாலின பாகுபாடு காரணமாக உயர் கல்வி மற்றும் மருத்துவ பராமரிப்பு கிடைப்பதில்லை என்பதால், அவர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் எனவும் கவலையை வெளியிட்டுள்ளது, இந்த அறிக்கை.
அனைத்து நாடுகளிலும் குழந்தை திருமணத்தை தடைசெய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பெண் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், அனைத்து வகையான நவீன அடிமைத்தனத்தை குற்றங்களாக்க வேண்டும், பெண்களின் உரிமைகளை வலியுறுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, பல பரிந்துரைகளை முன்வைத்து, விண்ணப்பிக்கிறது, ஐ.நா அறிக்கை.
No comments:
Post a Comment