Tuesday, 27 October 2020

திருஅவையில் 13 புதிய கர்தினால்கள் அறிவிப்பு

 திருஅவையில் 13 புதிய கர்தினால்கள் அறிவிப்பு


80 வயதிற்கு மேற்பட்ட 4 பேர் உட்பட 13 புதிய கர்தினால்கள், நவம்பர் 28ம் தேதி திருத்தந்தையால் கர்தினால்களாக உயர்த்தப்பட உள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் புதிய கர்தினால்களாக 13 பேரின் பெயர்களை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் Mario Grech, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆயர் Marcello Semeraro, ருவாண்டாவின் Kigali பேராயர் Antoine Kambanda, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் பேராயர் Wilton Gregory, பிலிப்பின்ஸின் Capiz பேராயர்  Jose Advincula, கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்தவரும், சிலேயின் சந்தியாகு பேராயருமான Celestino Aós Braco, புரூனேயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Cornelius Sim, இத்தாலியின் சியென்னா பேராயர் Augusto Paolo Lojudice, அசிசி நகர் பிரான்சிஸ்கன் துறவு இல்ல பொறுப்பாளர், அருள்பணி Mauro Gambetti ஆகியோருடன், 80 வயதிற்கு மேற்பட்ட மேலும் 4 பேரின் பெயர்களும் புதிய கர்தினால்களாக திருத்தந்தையால் இஞ்ஞாயிறன்று நண்பகலில் அறிவிக்கப்பட்டன.

திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தகுதிகளுள் ஒன்றான 80 வயது வரம்பை கடந்துள்ள, மெக்சிகோவின் San Cristobal de las Casas மறைமாவட்ட முன்னாள் ஆயர் Felipe Arizmendi Esquivel, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலக கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்ற பேராயர் Silvano Tomasi, பாப்பிறை இல்ல மறையுரையாளராகச் செயலாற்றிய கப்புச்சின் துறவு சபை அருள்பணி Raniero Cantalamessa, இத்தாலியின் Divino Amore திருத்தலத்தின் பங்குத்தந்தை அருள்பணி Enrico Feroci உட்பட 13 பேர் திரு அவையின் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்கள் 13 பேரும், வரும் மாதம், அதாவது, நவம்பர் மாதம் 28ம் தேதி இடம்பெறும் திருவழிபாட்டு நிகழ்வில், திருத்தந்தையால் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...