FAO நடத்திய பன்னாட்டு கூட்டத்திற்கு, திருத்தந்தையின் செய்தி
இறைவன்
நமக்களித்த இவ்வுலகை, காயப்படுத்தாமல், கனிவுடன் நடத்தினால், இந்தப்
பூமிக்கோளம், மனித குடும்பத்திற்கு வாழ்வளிக்கும் சுனையாக மாறும் –
திருத்தந்தை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
டிசம்பர் 13, இவ்வியாழனன்று, ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில், FAO எனப்படும் உணவு மற்றும் வேளாண்மை உலக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை அனுப்பினார்.
இந்தக் கருத்தரங்கிற்கு, "தண்ணீர், வேளாண்மை மற்றும் உணவு: நாளைய தினத்தை கட்டுவோமாக" என்ற தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருந்தது குறித்து, தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இத்தலைப்பு, "நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்" (தி.பா. 85,13) என்று திருப்பாடலில் கூறப்பட்டுள்ளச் சொற்களை நினைவுறுத்துவதாகக் கூறியுள்ளார்.
இயற்கையின் வளங்கள் அனைத்தும் இறைவனிடமிருந்து வருவன என்பதை, விவிலியமும், பெரும்பாலான மனிதர்களின் மத நம்பிக்கையும் கூறுகின்றன என்பதை, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வளங்கள், அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதை, ஒரு சிலரின் சுயநலம் தடை செய்துவருகிறது என்று எடுத்துரைத்தார்.
சுயநலத்தால் உருவாகும் அநீதிகளைத் தடுத்து நிறுத்தினால், பூமியின் வளங்கள் அனைவரையும் சென்றடைவதை நம்மால் உறுதி செய்யமுடியும் என்று, திருத்தந்தை, இச்செய்தியில், வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இறைவன் நமக்களித்த இவ்வுலகை, காயப்படுத்தாமல், கனிவுடன் நடத்தினால், இந்தப் பூமிக்கோளம், மனித குடும்பத்திற்கு வாழ்வளிக்கும் சுனையாக மாறும் என்று, திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
இந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அனைவரும், இந்த முக்கியமான கூட்டத்திலிருந்து வெளியேச் செல்லும்போது, நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தைக் காக்கும் புதிய உத்வேகத்துடன் செல்வார்களாக என்று, திருத்தந்தை, தன் செய்தியின் இறுதியில், ஆசி வழங்கியுள்ளார்.

No comments:
Post a Comment