Sunday, 23 December 2018

சாலையோர சிறாருடன் இந்திய ஆயர் பேரவை கிறிஸ்மஸ்

சாலையோர சிறாருடன் இந்திய ஆயர் பேரவை கிறிஸ்மஸ் சாலையோர சிறாருடன் இந்திய ஆயர் பேரவை கிறிஸ்மஸ்

விசுவாசியின் இதயம், கிறிஸ்துவின் மீதுள்ள அன்பால் நிறைந்திருக்கும்போது, ஏழைகளோடு பகிர்ந்துகொள்ளும் முறை பற்றி அந்த இதயம் அறிந்திருக்கும் என்று, பெங்களூரு பேராயர் கூறியுள்ளார்
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
ஏழைகளின் குரலுக்குச் செவிமடுத்து, அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது, உடனடித் தேவையாக உள்ளது என்று, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் கூறியுள்ளார்.
பேராயர் மச்சாடோ அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்கள் மீது அன்பு காட்டப்படும்போது, அது, ஆண்டவரின் ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு விசுவாசியின் இதயம், கிறிஸ்துவின் மீதுள்ள அன்பால் நிறைந்திருக்கும்போது, இறைவனால் அன்புகூரப்பட்ட ஏழைகள் மீது அக்கறை செலுத்துவது பற்றி, அவர் அறிந்திருப்பார் என்றும், பேராயரின் செய்தி கூறுகின்றது.
கடந்த ஆகஸ்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, Kodagu மாவட்டத்திற்கு, 14 கோடியே பத்து இலட்சம் டாலருக்கு அதிகமான நிதியைச் சேகரித்துள்ள, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் குழுக்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார், பேராயர் பீட்டர் மச்சாடோ. (Fides)
மேலும், புதுடெல்லியில், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைமையகத்திற்கு, சாலையோரச் சிறாரை வரவழைத்து, அவர்களுடன் கிறிஸ்மஸ் விழாவைச் சிறப்பித்து, பரிசுப்பொருள்களையும் வழங்கியுள்ளனர், ஆயர் பேரவை அதிகாரிகள். (CBCI)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...