Sunday, 23 December 2018

மகிழ்வாய் இருப்பதற்கு புனிதராய் வாழுங்கள்

மகிழ்வாய் இருப்பதற்கு புனிதராய் வாழுங்கள் வத்திக்கான் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து

வத்திக்கான் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
புனிதர்களாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், புனிதர்களாக வாழ்வதற்கு அஞ்ச வேண்டாம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் பணியாற்றும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்
வத்திக்கானில் பணியாற்றும் அனைவரையும், அவர்களின் குடும்பத்தினரையும், டிசம்பர் 21, இவ்வெள்ளிக்கிழமை நண்பகலில் சந்தித்து, அவர்களுடன் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்வாய் இருப்பதற்கு புனிதராய் வாழுங்கள், இதுவே எனது கிறிஸ்மஸ் வாழ்த்து என்று கூறினார்.
கிறிஸ்மஸ் மகிழ்வின் விழா என்றும், பெத்லகேம் குழந்தையின் மகிழ்வால் தாக்கப்பட்ட அனுமதியுங்கள், இதுவே, புனிதத்துவப் பாதை என்று, இச்சந்திப்பில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.   .
கிறிஸ்மஸ் குடிலை நாம் பார்க்கும்போது, அதில் வைக்கப்பட்டுள்ள நம் அன்னை மரியா, புனித யோசேப்பு, இடையர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், ரொட்டி சுடுபவர்கள் என, எல்லாரும், குழந்தை இயேசுவைப் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளனர் என்றுரைத்த திருத்தந்தை, ஆயிரம் கவலைகள் இருந்தாலும், அவர்கள், கடவுளிடமிருந்து இக்கொடையைப் பெற்றதால், மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார்.
இந்தக் குடிலில் உள்ளவர்கள், நாம் வேலை செய்யும் இடங்களையும், நம் வேலைகளையும் நினைத்துப் பார்க்க வைக்கின்றனர் என்றும், நம் பணியிடங்களுக்கு அருகிலும் புனிதம் விளங்குகின்றது எனவும், ஆறாவது ஆண்டாக திருத்தந்தை பணியாற்றும் நான், பல்வேறு புனிதர்களை இந்தப் பணியிடங்களில் பார்த்து வருகிறேன் எனவும் திருத்தந்தை கூறினார்.
இப்பணியாளர்கள் எப்போதும் மகிழ்வாக வாழ்வதற்குக் காரணம், தங்களின் மகிழ்வை மற்றவரோடு பகிர்வதற்குத் தெரிந்துள்ளதே என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதராக, பயப்படாமல் வாழுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...