Sunday, 23 December 2018

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து திருத்தந்தை பிரான்சிஸ்,முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

கடந்த அக்டோபரில் திருத்தந்தை ஆறாம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ உட்பட ஏழு இறைஊழியர்கள், புனிதர்களாக அறிவிக்கப்படுவதற்கு முந்திய நாள் மாலையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
“அன்னை மரியிடம் நம்மை அர்ப்பணிப்போம், இதனால், குழந்தை இயேசுவுக்காக, நம் இதயங்களைத் தயாரிப்பதற்கு அவர் உதவுவார்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டரில், பதிவுசெய்துள்ளார்.
இயேசுவின் பிறப்பு பெருவிழாவைச் சிறப்பிக்கும் நாள் நெருங்கிவரும்வேளையில், இவ்விழாவுக்கு, ஆன்மீக வழியில், நம்மை சிறந்த விதமாகத் தயாரிப்பதற்கு அன்னை மரியின் உதவியை நாடுவோம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், டிசம்பர் 21, இவ்வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து, கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
வத்திக்கானில், Mater Ecclesiae என்ற இல்லத்தில் தங்கியிருக்கும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, இவ்வெள்ளி மாலையில் சந்தித்து, சிறிதுநேரம் உரையாடிக்கொண்டிருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், கிறிஸ்மஸ் காலத்திலும், ஏனைய முக்கிய நாள்களிலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து, கலந்துரையாடி வருகிறார்.
கடந்த ஜூனில் புதிய கர்தினால்கள் சிவப்பு தொப்பி, மோதிரம் ஆகியவற்றை பெற்ற நிகழ்வுக்குப் பின்னரும், 14 புதிய  கர்தினால்களுடன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...