Monday, 17 December 2018

இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில், புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வில் கிறிஸ்தவ செபங்கள்

இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில், புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வில் கிறிஸ்தவ செபங்கள் மிசோராம் முதலமைச்சர் பதவியேற்பு

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மிசோராமில், 91.58 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். இம்மாநிலத்தின் ஏறத்தாழ 91 விழுக்காடு பகுதி காடுகளாகும்
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில், புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வில், முதன்முறையாக, கிறிஸ்தவ செபங்கள் இடம்பெற்றன என ஊடகங்கள் அறிவித்துள்ளன
டிசம்பர் 15, இச்சனிக்கிழமை பகல் 12 மணிக்கு, Aizawl நகரின் ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், நாட்டுப்பண்ணைத் தொடர்ந்து, திருவிவிலிய வாசகங்களும், அல்லேலூயா கிறிஸ்தவப் பாடல்களும் இடம்பெற்றன.
மிசோராம் மாநிலத்தில் மறைப்பணியாற்றும் 16 முக்கிய கிறிஸ்தவ சபைகளின் அவைத் தலைவர் Lalhmingthanga அவர்களும், இந்நிகழ்வில் செபித்தார்.
இந்தியாவின் வடகிழக்கிலுள்ள, மிசோராம் மாநிலத்தின் வரலாற்றில், இவ்வாறு நடைபெற்றது இதுவே முதன்முறையாகும்.
Mizo தேசிய காட்சித் (MNF) தலைவர் Zoramthanga அவர்கள் முதலமைச்சராகவும், Tawnluia அவர்கள், உதவி முதலமைச்சராகவும், பத்து அமைச்சர்களும், இச்சனிக்கிழமையன்று  பணிப்பிரமாணம் செய்துள்ளனர்.
புதிய முதலமைச்சர் Zoramthanga அவர்கள், 1998ம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு வரை, இரண்டு முறைகள் முதலமைச்சராகப் பணியாற்றியவர். (Agencies)

No comments:

Post a Comment