Monday, 17 December 2018

சிரியாவில் 40 இலட்சம் சிறார் போர்ச் சூழலில் வளர்ந்தவர்கள்

சிரியாவில் 40 இலட்சம் சிறார் போர்ச் சூழலில் வளர்ந்தவர்கள் போர் சூழ்ந்த சிரியாவிலிருந்து குழந்தைகளுடன் வெளியேறும் மக்கள்

சிரியாவில் சண்டை தொடங்கியதிலிருந்து பிறந்துள்ள நாற்பது இலட்சம் சிறாருக்கு, பள்ளிக்குச் செல்வதற்கு உதவிகள் தேவை - யுனிசெப்
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
சிரியா நாட்டில் எட்டாவது ஆண்டாக போர் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டின் பாதிச் சிறார், அதாவது ஏறக்குறைய நாற்பது இலட்சம் சிறார், தங்கள் வாழ்வில் வன்முறையை மட்டுமே பார்த்து வளர்ந்தவர்கள் என்று, யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சிரியாவில் எட்டு வயதுச் சிறார் அனைவரும், ஆபத்து, அழிவு மற்றும் மரணத்தின் மத்தியில் வளர்ந்தவர்கள் என்று, அந்நாட்டிற்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, யுனிசெப் செய்திட்ட இயக்குனர், Henrietta Fore அவர்கள் தெரிவித்தார்.
சிரியாவில் போர் தொடங்கியதிலிருந்து நாற்பது இலட்சம் சிறார் பிறந்துள்ளனர் என்றும், இவர்கள், தடுப்பூசிகளைப் பெறவும், பாதுகாப்பு உணர்வுடன் வாழவும், பாதுகாக்கப்படவும் வழியமைக்கப்பட வேண்டும் என்றும், Fore அவர்கள் கூறியுள்ளார்.
இச்சிறார், பள்ளிக்குச் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் கூறிய யுனிசெப் அமைப்பின் அதிகாரி Fore அவர்கள், சிரியாவில் போர் தொடங்கியதிலிருந்து, சிறாரும், இளையோரும், தொடர்ந்து பல்வேறு விதமான வன்முறைகளுக்குப் பலியாகி வருகின்றனர் எனவும் கூறினார். (UN)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...