Saturday, 1 February 2014

ஐ.நா மனிதஉரிமை கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் போட்டி

ஐ.நா மனிதஉரிமை கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் போட்டி

Source: Tamil CNN
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவியிடங்களை அதி கரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.நியூயார்கில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் குமார் முகர்ஜி பேசியதாவது:
“ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சர்வதேச அளவில் அமைதியும், பாதுகாப்பான சூழ்நிலையும் ஏற்பட்டால்தான், இந்தியா தனது வளர்ச்சி இலக்கை எட்ட முடியும்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா உள்பட 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக வரும் அக்டோபரில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மனித உரிமை கவுன்சிலில் இடம் பெற முடிவு செய்துள்ளோம்.
ஐ.நா. அமைதிப்படையில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காங்கோ, தெற்கு சூடான் நாடு களில் அமைதிப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.நா.வின் சமூக பொருளாதார வளர்ச்சிப் பணிகளிலும் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இப்பணிகளுக்காக நிதி உதவி களையும், தொழில்நுட்ப உதவிகளையும் இந்தியா அளித்து வருகிறது” என்றார்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...