Wednesday, 1 May 2013

இலங்கையில் தமிழர்களின் முழு நிலப்பரப்பும் சிங்களமயமாக்கப்படுகின்றது!

இலங்கையில் தமிழர்களின் முழு நிலப்பரப்பும் சிங்களமயமாக்கப்படுகின்றது!

Source: Tamil CNN

ஈழத்தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற தமிழர் எழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.
இலங்கையில் தமிழர்கள் நிலப்பரப்பு முழுவதும் சிங்கள மயமாக்கப்படுகிறது.
தமிழர்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க இந்தியா அனுப்பிய நிதி உதவியைக் கொண்டு சிங்களவர்களுக்கு இலங்கை அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஈழத்தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது, கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சட்டதரணி, சிவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டதரணி, அலைமகன் என்கின்ற பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment