Wednesday, 1 May 2013

நெதர்லாந்து பேரரசின் புதிய அரசர் வில்லியம் அலெக்சாண்டர் புதிய அரசராக முடிசூட்டப்பட்டார்!

நெதர்லாந்து பேரரசின் புதிய அரசர் வில்லியம் அலெக்சாண்டர் புதிய அரசராக முடிசூட்டப்பட்டார்!
உலகின் பல நாடுகளில் தற்போதும் மன்னராட்சி நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்று நெதர்லாந்து பேரரசு. இந்த அரசாட்சியின் ராணியாக பீட்ரிக்ஸ் (வயது 75) இருந்து வந்தார். 33 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த அவர் இன்று பதவி விலகினார். இதையடுத்து, வாரிசுரிமை அடிப்படையில் ராணியின் மூத்த மகன் வில்லியம் அலெக்சாண்டர் புதிய அரசராக முடிசூட்டப்பட்டார்.
இந்நிகழ்ச்சி நெதர்லாந்து நாட்டின் மோசேஸ் அரங்கில், அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டது. புதிய அரசரையும் அவரின் மனைவியையும் பார்க்க 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாம் சதுக்கத்தில் கூடி இருந்தனர். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பபட்டது.
46 வயதான அரசர் அலெக்சாண்டர், ஹாலந்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார். இவருக்கு மேக்சிமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். 120 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக அரசர் ஒருவருக்கு மூடிசூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Tamil CNN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...