Wednesday, 1 May 2013

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு மீண்டும் இலங்கையிடம் வலியுறுத்திய அமெரிக்கா!

 ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு மீண்டும் இலங்கையிடம் வலியுறுத்திய அமெரிக்கா!

அண்மைக் காலமாக இலங்கையில் ஊடக நிறுவனங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புகள் விடயங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி செய்யும் என அமெரிக்கா அரச திணைக்கள பேச்சாளர் பேட்ரிக் வென்ரெல் தெரிவித்துள்ளார்.
கருத்து வெளியிடும் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அதிகாரிகளை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து வெளியிடும் சுதந்திரம் பற்றி ஜெனிமா மனித உரிமை ஆணையத்தில் மாத்திரமல்ல இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதென அமெரிக்கா கூறியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையை ஆராய்ந்து கவலையடைந்ததாக மெரிக்கா அரச திணைக்கள பேச்சாளர் பேட்ரிக் வென்ரெல் தெரிவித்துள்ளார்.
உதயன் பத்திரிகை மீதான தாக்குதலையும் அமெரிக்கா கண்டித்துள்ளது. உதயன் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, பத்திரிகை விநியோகத்தர்கள் தாக்கப்பட்டு பத்திரிகைகள் எரிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
usaa


Source: Tamil CNN

No comments:

Post a Comment