தட்டையான மலைகள்
(Roraima, Venezuela - World's biggest flat mountain)
தென் அமெரிக்க நாடான வெனேசுவேலாவிலுள்ள அடர்ந்த காடுகளில் தனித்த தீவுகளாக, தட்டையான மலைகள் காணப்படுகின்றன. அந்நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ள இந்த மலைகள் tepuis என அழைக்கப்படுகின்றன. பொதுவாக மலைகள் கூம்பு வடிவத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த மலைகள் முக்கோண வடிவில், முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் காணப்படுகின்றன. தட்டையான இம்மலைகள், இப்பூமியில் உருவான மிகப் பழமையான சில அமைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் சில மலைகள், ஏறக்குறைய 200 கோடி ஆண்டுகள் வயதைக் கொண்டுள்ளன. உலகின் வேறு சில பாகங்களில் அமைந்துள்ள இம்மலைகள், mesa, tuya, butte, amba அல்லது tepui என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. வெனேசுவேலா நாட்டிலுள்ள Roraima என்ற தட்டையான மலை, உலகிலுள்ள உயரமான தட்டையான மலையாகும். இது 31 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 3
கிலோ மீட்டர் நீளத்தில் எல்லாப் பக்கங்களிலும் ஏறக்குறைய 400மீட்டர்
உயரத்தைக் கொண்டுள்ளது. ஓரிடத்தில் இதன் உயரம் 1086 மீட்டர் ஆகும்.
வெனேசுவேலா, பிரேசில், கயானா
ஆகிய நாடுகளை இது எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மலையில் ஏறக்குறைய ஆண்டின்
365 நாள்களும் மழை பெய்கிறது. ஆங்காங்கே சில புல் புதர்கள் உள்ளன.
உலகிலுள்ள அரியவகை தாவரங்களில் மூன்றில் ஒரு பகுதி இங்கு உள்ளன. Table வளைகுடாவை அடைந்த முதல் ஐரோப்பியரான António de Saldanha என்பவர், 1503ம் ஆண்டில் இம்மலையில் ஏறி, அதற்கு ‘Table Mountain’ என்று பெயரிட்டார். ஐரோப்பிய நாடுகாண் பயணிகள் இங்கு செல்வதற்கு முன்னர், இம்மலை, அப்பகுதியின் பூர்வீக இன மக்களுக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது. இவ்விடத்தில் இருந்த ஒரு பெரிய மரம், இவ்வுலகின் அனைத்துப் பழங்களையும், காய்களையும் கொண்டிருந்ததாகவும், ஒரு மாய வித்தைக்காரர் அதன்மீது விழுந்ததால் அம்மரம் தரையில் விழுந்து பெருவெள்ளத்தை ஏற்படுத்தியதாகவும் அம்மக்கள் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment