ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் மீது நாளை ஓட்டெடுப்பு!
போர்க்குற்றம் தொடர்பாக சுதந்திரமான, நம்பிக்கைக்குரிய பன்னாட்டு அமைப்பின் முலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதற்காக தமிழ்நாட்டிலும், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் மாணவர்கள் மற்றும் பெதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில் வலுவான வாசகங்கள் எதுவும் இல்லை. இலங்கையில் நடந்துள்ள இனப் படுகொலையை போர்க் குற்றங்கள் என பிரகனடப்படுத்தும் வாசகங்களோ இல்லை. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது நேற்றே விவாதம் தொடங்கியது. இன்றும் விவாதம் தொடர்ந்து நடக்கிறது. முடிவில் தீர்மானத்தின் மீது நாளை (21-ந்தேதி) ஓட்டெடுப்பு நடக்கிறது.
No comments:
Post a Comment