Tuesday 19 March 2013

பூகம்பத்தினால் நிலத்தடி நீர் தங்க படிவமாக மாறுகிறது: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

பூகம்பத்தினால் நிலத்தடி நீர் தங்க படிவமாக மாறுகிறது: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்


 பழங்காலத்தில் பூமிக்குள் புதைந்த மரங்கள் மற்றும செடிகொடிகள் போன்றவை மக்கி மண்ணோடு மண்ணாகி நிலக்கரி படிவங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தங்க படிவங்கள் உருவானது எப்படி? என்பது குறித்து ஆஸ்திரேலியாவின் குவின்ஸ் லேன்டு பல்கலைக்கழக மண்ணியல் நிபுணர்கள் டியான்வெதர்லே தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூகம்பம் ஏற்படும்போது அடியில் இருக்கும் நிலத்தடி நீர் தங்க படிவங்களாக மாறுகிறது என கண்டுபிடித்தனர். அதன்படி பூகம்பம் ஏற்படும்போது பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நம்ப முடியாத அளவு தட்பவெப்ப நிலையும், அழுத்தமும் மாறுகிறது.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் தண்ணீர் ஒரு நிலைப்படுத்தப்பட்டு கார்பன்-டை- ஆக்சைடு மற்றும் மணல் ஆகவும் மாறுகிறது. பின்னர் அவை பலவண்ண வடிவம் கொண்ட கல்லாக உருவாகிறது. அதுவே தங்கம் என அழைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் பூகம்பம் ஏற்படும்போது உண்டாகும் இடைவெளியில் தேங்கி நிற்கும் தண்ணீர் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் ஆவியாக மாறுகிறது. பின்னர் அது மணல் ஆக மாறி பின்னர் ஜொலிக்க கூடிய தங்கமாகிறது என்றும் மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த தகவல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment