Thursday, 28 March 2013

மிதிவண்டி (Cycle) தோன்றிய வரலாறு...

மிதிவண்டி (Cycle)  தோன்றிய வரலாறு...

19ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த சைக்கிளைக் கண்டுபிடித்த பெருமை பலரைச் சாரும். பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸில் வாழ்ந்த Comte Mede De Sivrac, மரதுண்டுகளைக் கொண்டு வீட்டிற்குத் தேவையான அலங்காரப் பொருட்களைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம்தான் சைக்கிள் எனப்படும் மிதிவண்டி.
Sivracன் வடிவத்தையும் தொழில்நுட்பத்தையும் முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த Karl Von Drais என்பவர் 1817ம் ஆண்டு வடிவமைத்த சைக்கிளில் முதன் முதலாக Steering எனப்படும் திசைமாற்றி பொருத்தப்பட்டது.
அதுவரை மரத்தால் வடிவமைக்கப்பட்டு வந்த சைக்கிளை, 1818ம் ஆண்டு, டென்னிஸ் ஜான்சன் என்பவர் முதன் முதலாக உலோகப்பொருளைப் பயன்படுத்தி, வடிவமைத்தார். இந்த மூன்று வடிவங்களும் காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில்தான் அமைக்கப்பட்டிருந்தன.
உலகில் முதன் முதலில் Pedalஐ மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான சைக்கிளை வடிவமைத்த பெருமை Krikpatric Macmillan என்பவரையே சாரும். எனவேதான் சைக்கிளைக் கண்டறிந்தவராக Macmillan அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்தில் கொல்லராகப் பணியாற்றி வந்த இவர், திசைமாற்றி (steering), தடை (brake) மற்றும் மிதிஇயக்கி (pedal) ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான சைக்கிள் ஒன்றை 1839ம் ஆண்டு வடிவமைத்தார்.
சைக்கிளின் பரிணாம வளர்ச்சி இதற்குப் பின்னரும் பல ஆண்டுகள் நீடித்தது. 1885ம் ஆண்டு John Kemp Starley என்பவர், இரு சமமான அளவுடைய சக்கரங்களைக் கொண்டு வடிவமைத்த சைக்கிளைத்தான் இன்று நாம் பயன்படுத்துகிறோம்.

நன்றி: வரலாற்றுச் சுவடுகள்


 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...