2000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு! சென்னையில் நோக்கியாவுக்கு வந்த சோதனை
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு ஆலையில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தொடங்கி அந்த நிறுவனத்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், நோக்கியா நிறுவனம் பல கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்ததாகவும், இது தொடர்பாக மேலும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், நோக்கியா நிறுவனம் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறி,. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, நோக்கியா செல்போன் உற்பத்தி நிறுவனமான பின்னிஷ் மொபைல் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் கடந்த 21 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
நீதிமன்றம் இடைக்கால தடை
இந்நிலையில் வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸை எதிர்த்து நோக்கியா நிறுவனம், தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இதனிடையே வருமானவரித்த துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதை உறுதி செய்துள்ள நோக்கியா நிறுவனம், இந்திய அரசுக்கும் பின்லாந்து அரசுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படியும், உள்ளூர் சட்ட விதிகளின்படியே தாங்கள் செயல்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து தாங்கள் கடுமையாக போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளது,.
No comments:
Post a Comment