தலை கீழாக பேப்பர் வாசிக்கும் அபூர்வ பெண்!
ஐரோப்பிய நாடான செர்பியாவின், உசைஸ் நகரில் வசிப்பவர், போஜானா டேனிலோவிக், 28. பிறந்ததில் இருந்தே, இவரது பார்வையில், அபூர்வமான குறைபாடு காணப்படுகிறது.
இவர் பார்க்கும் காட்சிகள், தலைகீழாகவே தெரிகின்றன.இதனால், புத்தகம் மற்றும் செய்தித்தாள்களை, தலைகீழாக வைத்து, வாசிக்க வேண்டியுள்ளது.
வீட்டில், இவர் பார்க்கும், “டிவி’யும், தலைகீழாகவே தொங்கவிடப்பட்டு உள்ளது.இதனால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், நேராக வைக்கப்பட்ட, மற்றொரு, “டிவி’யை பார்க்கின்றனர்.
இவரது குறைபாடு குறித்து ஆய்வு செய்த, மசாசூசெட்ஸ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகையில்,
“இவரது கண்கள் சரியாக உள்வாங்கினாலும், மூளையின் நரம்பில் உள்ள கோளாறால், காட்சிகள் தலைகீழாகத் தெரிகின்றன’ என்றனர்.
No comments:
Post a Comment