Monday, 21 January 2013

பாபிலோனின் தொங்கும் தோட்டம்

பாபிலோனின் தொங்கும் தோட்டம்

பாபிலோனின் தொங்கும் தோட்டம் உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகும். 43 ஆண்டுகள் பாபிலோனின் அரசராக ஆட்சி செய்த 2ம் நெபுகத்னேசரால் கி.மு.600ல் இது கட்டப்பட்டதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. பாபிலோன் சமதளமான, வறண்ட பூமி. சிறிதளவே மழை பெய்யும். பசுமையையும் அதிகமாகக் காண முடியாது. ஆனால் நெபுகத்னேசரின் மனைவி Amytisன் சொந்த ஊர் மலைப்பாங்கான, எப்பொழுதும் பசுமையாகக் காணப்படும். எனவே  Amytis பாபிலோன் வந்தபின்னர் எப்பொழுதும் தனது ஊரை நினைத்துக் கொண்டிருந்ததால் அவருக்கென மிகப் பெரிய தோட்டம் ஒன்றை அமைத்தார் நெபுகத்னேசர். Amytis வாழ்ந்த தோட்டத்தைப் போன்று, இத்தோட்டமும் பலவகையான மலர்கள், கனிகள், விலங்குகள், மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கொண்டதாய் இருந்தது. உலகம் முழுவதிலிமிருந்து இவை கொண்டுவரப்பட்டன. இத்தோட்டம், ஈராக்கின் பாக்தாத் நகருக்குத் தெற்கே ஏறக்குறைய முப்பது மைல்கள் தூரத்தில் யூப்ரட்டீஸ் நதிக்கரையோரத்தில் அமைக்கப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் இந்தப் பாபிலோனின் தொங்கும் தோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. இது அழியாமல் இருந்திருந்தால் உலகின் ஏழு அதிசயங்களுள் இரண்டாவது பழமையான அதிசயமாக இருந்திருக்கும் எனச் சொல்லப்படுகிறது. அண்மையில் யூப்ரட்டீஸ் நதிக்கரையோரங்களில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியில், 25 மீட்டர் உயரமான தடித்த, கனமான சுவர்களும், விதைகள் பரவிக்கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வராய்ச்சிகள், பாபிலோனின் தோட்டம் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...