Monday, 21 January 2013

திருமணப் பாரம்பரியங்கள்

திருமணப் பாரம்பரியங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் திருமணத்துடன் தொடர்புள்ள பல பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள் உள்ளன. இதோ ஒரு சில...
அயர்லாந்தில், பெண்ணும், மாப்பிள்ளையும் திருமண வைபவத்தில் நடனமாடும்போது, பெண்ணின் இரு பாதங்கள் எப்போதும் தரையிலேயே இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் கவனமாய் இருப்பர். பெண்ணின் பாதங்கள் தரையைவிட்டு மேலேச் சென்றால், தீய ஆவிகள் வந்து அப்பெண்ணை அப்படியே அள்ளிச் செல்லும் என்று நம்பப்படுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் பெண்ணின் பாதங்கள் தரையைவிட்டு மேலே எழக்கூடாது.
French Polynesiaவில் திருமண வரவேற்பு நிகழ்வு முடிந்தபின், கணவனின் உறவினர்கள் அருகருகே தரையில் முகம் குப்புற படுத்துக்கொள்வர். அந்த மனிதக் கம்பளத்தின் மீது கணவனும், மனைவியும் நடந்து செல்லவேண்டும். புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு அவர்கள் தரும் வரவேற்பு இது.
உலகின் பல நாடுகளில் மணப்பெண் பல வண்ணங்களில் உடை அணியும்போது, மேற்கத்திய நாடுகளில் மட்டும் மணப்பெண்கள் வெள்ளை அணிவது வழக்கம். இந்தப் பழக்கம் 1840ம் ஆண்டு விக்டோரியா அரசியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இளவரசர் ஆல்பர்ட்டை அவர் மணக்கும்போது, வெள்ளை உடையில் திருமணச் சடங்குக்கு வந்தார். (ஆதாரம் - 25 Extremely strange wedding traditions)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...