An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Saturday, 29 September 2012
robert john kennedy: Evidence of Human Torture and Killing of Tamils in...
robert john kennedy: Evidence of Human Torture and Killing of Tamils in...: இனப்படுகொலை படங்களை - Evidence of Human Torture and Killing of Tamils in Srilanka
Evidence of Human Torture and Killing of Tamils in Srilanka - இனப்படுகொலை படங்களை
இனப்படுகொலை படங்களை - Evidence of Human Torture and Killing of Tamils in Srilanka
Pope invites Indian nun for Bishops Synod
Pope invites Indian nun for Bishops Synod
She is the first woman professor of New Testament at Jnana-Deepa Vidyapeeth, a Pontifical university in Pune.
Pune:
Pope Benedict XVI has invited an Indian Catholic nun to participate in the next month’s Bishops Synod in Rome.
“The Holy Father has appointed me as one of the auditors for the Synod," Sister Rekha M. Chennattu, the provincial superior of the Religious of the Assumption of the Indian province, told ucanindia.in today.
The 13th Ordinary General Assembly of the Synod of Bishops scheduled for October 7-28 will address the theme "The New Evangelization for the Transmission of the Christian Faith."
“I consider it a special grace and responsibility to participate in the discussions, highlighting the Indian perspectives as an Indian religious woman and a biblical scholar and theologian,” the nun said.
She is the first woman professor of New Testament at Jnana-Deepa Vidyapeeth, a Pontifical university in Pune.
The nun said she would seek clarity on understanding and implementing the idea of new evangelization in the Catholic Church in India amidst its multi-faith and multi-cultural context.
She said those participating at the synod as audi�tors are given an opportu�nity to ex�press their opinion in the small language groups or in the auditiones during the plenary sessions.
“During the days of general discussion, provision is made–depending on the time available–for auditiones, that is, opportunities for those who are auditors and fraternal delegates to speak on a subject di�rectly related to the topic of the synod,” Sister Chennattu said.
The nun, who is a member of the Indian Women Theologians Forum and Indian Biblical Scholars, said in the context of secularization which ignores the presence of God and the sacredness of the cosmos, the real challenge is to find creative ways to preserve the dynamic and rich heritage of Christian faith to enhance life and inspire hope for future generations.
The other Indians invited for the synod by the Vatican include Cardinal Oswald Gracias, Cardinal George Alencheery, Archbishop A. Malayappan Chinnappa of Madras, Archbishop Filipe Neri Ferrao of Goa, Bishop Joseph Kallarangatt of Palai, Bishop Stanley Roman of Quilon.
Pope Paul VI established the Synod of Bishops on September 15, 1965 in response to the desire of the participants of the Second Vatican Council to foster the spirit of collegiality they experienced at the council.
Friday, 28 September 2012
Thursday, 27 September 2012
robert john kennedy: Catholics protest against Bollywood movies
robert john kennedy: Catholics protest against Bollywood movies: Catholics protest against Bollywood movies Catholic groups have also decided to file police complaint against all concerned for hurtin...
Catholics protest against Bollywood movies
Catholics protest against Bollywood movies
Catholic groups have also decided to file police complaint against all concerned for hurting religious sentiments.
(Photo:india-forums.com) |
The protesters were demanding removal of ‘objectionable’ scenes from the movies Kamaal Dhamaal Malamal and Kya Super Kool Hai Hum.
They took out a procession from St. Peter’s Church in Bandra to Indian Motion Picture Producers (IMPPA) and Film Makers Combine (FMC) office to register their protest.
The protest was organized by Association of Concerned Catholics, Catholic Secular Forum, Maharashtra Christian Youth Forum, Catholic Residents Organization for Social Services and Catholics for Preservation of Faith.
The protesters demanded that a representative appointed by the Mumbai archdiocese be nominated on the Censor Board to vet movies concerning the community.
Last week, the community submitted a memorandum to Leela Samson, chairperson of the Central Board of Film Certification in this regard.
They said that the movie Kamaal Dhamaal Malamaal, which would release on Sept. 28, includes scenes where a priest is depicted dancing with Catholic imagery and the community portrayed as drunkards and of easy virtue.
The groups have also decided to file police complaint against all concerned for hurting their religious sentiments.
Earlier in August, Hindi movie Kya Super Cool Hain Hum showed a Christian priest solemnizing the “marriage” of two dogs, which evoked strong reactions from the community.
Source: press release
robert john kennedy: Catholic News in Tamil - 26/09/12
robert john kennedy: Catholic News in Tamil - 26/09/12: 1. பேராயர் மம்பர்த்தி : அனைத்துலகச் சட்டமே மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு இன்றியமையாதது 2. நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத...
Catholic News in Tamil - 26/09/12
1. பேராயர் மம்பர்த்தி : அனைத்துலகச் சட்டமே மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு இன்றியமையாதது
2. நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை : பேராயர் கைகாமா
3. மத்திய கிழக்கில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டுக்குக் கண்டனம்
4. போதைப்பொருள் வியாபாரமும் பயங்கரவாதச் செயல்களும் அதிகரிப்பதற்கு பெரு பேராயர் கண்டனம்
5. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் கிறிஸ்தவத்தின்மீது ஆர்வத்தை எழுப்பியுள்ளது
6. இன்றைய உலகின் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. வேண்டுகோள்
7. உலகை வெப்பமாக்கிவரும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஓர் அனைத்துலக ஒப்பந்தம் அவசியம்
8. காது கேளாதோர் வாரம் செப்டம்பர் 24-30
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பேராயர் மம்பர்த்தி : அனைத்துலகச் சட்டமே மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு இன்றியமையாதது
செப்.26,2012. சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுவதற்கு மனித மாண்பின் தலைசிறந்த விழுமியமே பாதுகாப்புமிக்க அடித்தளமாக அமைகின்றது, ஏனெனில் மனிதர் இறைவனின் படைப்பு என்ற உண்மையோடு இது தொடர்புடையது, அதேசமயம்
சட்டத்தின் ஆட்சி தனது உண்மையான நோக்கத்தை எட்டுவதற்கு இது
அனுமதிக்கின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. உயர்மட்டக்
கூட்டத்தில் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அளவில் உரிமைகளின் நிலைமை குறித்த ஐ.நா. பொது அவையின் 67வது அமர்வில் உரையாற்றிய, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, சட்டத்தின் ஆட்சி பொதுநலனை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.
அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் மனித மாண்புடன் தெளிவான விதத்தில் தொடர்பு கொண்டுள்ளன என்றும், தந்தையாக, தாயாக இருப்பதற்கான உரிமை, ஒரு குடும்பத்தை உருவாக்கி அதை வளர்ப்பதற்கான உரிமை, தங்கள் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமை, வேலை செய்ய உரிமை, செல்வங்கள் சமமாகப் பங்கிடப்படும் உரிமை, கலாச்சார உரிமை, மனச்சான்றின் உரிமை, பேச்சுரிமை ஆகியவை உட்பட அனைத்து உரிமைகளும் சட்டத்தின் ஆட்சியைச் சார்ந்துள்ளன என்றும் பேராயர் கூறினார்.
இந்த உரிமைகள் எல்லாவற்றிலும் சமய சுதந்திரம் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்றுரைத்த பேராயர் மம்பர்த்தி, மனிதரின் இருப்பு குறித்த பெரிய கேள்விக்கான பதிலும், மனிதர் தன்னை இறைவனுக்குத் திறந்தவர்களாய் வைப்பதும், மனிதரின் சமயக்கூறும் அவரின் சமய சுதந்திரத்தைப் பொருத்தது என்றும் கூறினார்.
2. நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை : பேராயர் கைகாமா
செப்.26,2012.
நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்குப் போதுமான
நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தவறியுள்ளது எனக் கடுமையாய்க்
குற்றம்சாட்டியுள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Kaigama.
கடந்த ஞாயிறன்று Bauchi நகரில் புனித யோவான் பேராலயத்துக்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல் குறித்து Aid to the Church in Need என்ற பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பேராயர் கைகாமா, கிறிஸ்தவர்கள் தங்களது மத நம்பிக்கைகளை அனுசரிப்பதற்கு இத்தாக்குதல்கள் எவ்விதத்திலும் தடையாய் இல்லையெனத் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் அரசுத்தலைவர் Goodluck Jonathanனின் அரசு திறமையற்று இருக்கின்றது என்றும் பேராயர் குறை கூறினார்.
நைஜீரியாவில் ஆலயங்கள், சந்தைகள், அரசு மற்றும் பாதுகாப்புத்துறை கட்டிடங்கள் தாக்கப்பட்டதில் 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை 1400 பேர் இறந்துள்ளனர்.
3. மத்திய கிழக்கில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டுக்குக் கண்டனம்
செப்.26,2012. மேற்கத்திய நாடுகள், மத்திய
கிழக்குப் பகுதி மக்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்கள் தங்கள்
பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள் என்பதில் நம்பிக்கை வைக்க
வேண்டும் என்று மத்திய கிழக்குப் பகுதியின் இரு கிறிஸ்தவத் தலைவர்கள்
கூறினர்.
உரோமையில் திருப்பீடத்துக்கான ஈராக் தூதரகம் நடத்திய கூட்டத்தில் பேசிய மெல்கித்தேரீதி திருஅவையின் ஈராக் பேராயர் Jules Mikhael Jamil, வத்திக்கானுக்கான மெல்கித்தேரீதி திருஅவையின் பிரதிநிதி பேரருட்திரு Mtanios Haddad ஆகிய இருவரும் இவ்வாறு கூறினர்.
மத்திய கிழக்குப் பகுதியில் மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தலையீடும், பிற தலையீடுகளும் நிறுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட இவ்விரு தலைவர்கள், இந்தத்
தலையீடுகள் கலவரங்களை மேலும் தூண்டி விடுகின்றன மற்றும் அமைதிக்கான
அம்மக்களின் ஆசைக்கு இடையூறாய் இருக்கின்றன என்று தெரிவித்தனர்.
மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள்மீது மிகச் சிறிதளவே அக்கறை கொண்டுள்ளன எனத் தான் உணர்வதாகத் தெரிவித்தார் பேராயர் Jamil.
மேலும், இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்துப் பேசிய திருப்பீடத்துக்கான ஈராக் தூதர் Habeeb Mohammed Hadi Ali Sadr, அரபு நாடுகளிலும் வெளியிலும் வாழும் அரபுக் கிறிஸ்தவர்களுக்கு அந்நாடுகள் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தினார்.
கிழக்கிலும் மேற்கிலும் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதில் கிறிஸ்தவர்கள் பெரும்பங்காற்றியுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
4. போதைப்பொருள் வியாபாரமும் பயங்கரவாதச் செயல்களும் அதிகரிப்பதற்கு பெரு பேராயர் கண்டனம்
செப்.26,2012.
இலத்தீன் அமெரிக்கா முழுவதும் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபாரமும்
பயங்கரவாதச் செயல்களும் ஒழிக்கப்படுவதற்கு மக்கள் செபிக்குமாறு
கேட்டுள்ளார் பெரு நாட்டு Piura பேராயர் Jose Antonio Eguren.
இரக்கமுள்ள அன்னைமரியின் பெயரால் திருப்பலி நிகழ்த்திய பேராயர் Eguren, 1992ம் ஆண்டில் பெரு நாட்டு பயங்கரவாதக் குழுத் தலைவர் Abimael Guzman கைது செய்யப்பட்ட பின்னர் சிறிது குறைந்திருந்த பயங்கரவாதச் செயல்கள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன என்று கூறினார்.
அண்மையில்
பெரு நாட்டின் தென் பகுதியில் பல படைவீரர்களும் காவல்துறையினரும்
போதைப்பொருள் வியாபாரிகளால் கொல்லப்பட்டதையும் மறையுரையில் குறிப்பிட்ட
பேராயர், பயங்கரவாதம், மனிதமற்றது, நற்செய்திக்குப் புறம்பானது மற்றும் மனித மாண்புக்கும் சமூக அமைதிக்கும் புறம்பானது என்று கூறினார்.
5. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் கிறிஸ்தவத்தின்மீது ஆர்வத்தை எழுப்பியுள்ளது
செப்.26,2012.
திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் கிறிஸ்தவம் பற்றி அறிந்து
கொள்வதற்குக் கடுமையாய் உழைக்கத் தூண்டியுள்ளது மற்றும் கிறிஸ்தவம் பற்றிய
ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது என லெபனனின் ஒரு முஸ்லீம் கழகத் தலைவர்
கூறினார்.
இம்மாதம் 14 முதல் 16 வரை திருத்தந்தை மேற்கொண்ட லெபனன் திருப்பயணம் குறித்து ஒயாசிஸ் என்ற நிறுவனத்திடம் பேசிய Makassed என்ற முஸ்லீம் கழகத் தலைவர் Hicham Nachabé இவ்வாறு கூறினார்.
மேலும், திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் அன்னைமரியாவின் அடையாளமாக இருப்பதாக அந்நாட்டினர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
6. இன்றைய உலகின் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. வேண்டுகோள்
செப்.26,2012.
குழப்பங்கள் நிறைந்த இக்காலத்தை அழுத்தும் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத்
தலைவர்கள் மேலும் அதிக அளவில் முயற்சிகள் எடுக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர்
பான் கி மூன் ஐ.நா. பொது அவையில் கேட்டுக் கொண்டார்.
இன்றைய உலகில் பரவலாக நிலவும் பாதுகாப்பற்றநிலை, பெருமளவான நிதி பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படாமல் மரணத்தை வருவிக்கும் ஆயுதங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது, வெப்பநிலை மாற்றத்தால் அதிகரித்துவரும் எதிர்மறைத் தாக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய பான் கி மூன், இன்றைய உலகு தன்னைக் காப்பாற்றுவதற்கு நேரம் காலம் பார்க்காது உடனடியாகச் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
ஐ.நா.வில் இத்திங்களன்று தொடங்கியுள்ள 67வது பொது அமர்வு ஆண்டுக் கூட்டத்தில் இவ்வாறு உரையாற்றிய ஐ.நா.பொதுச் செயலர், மனிதக்
குடும்பத்தினராகிய நாம் எல்லாரும் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து
இவ்வாண்டின் இக்கூட்டத்தில் தான் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.
உலகில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது, அரபு உலகம், மியான்மார், இன்னும் பிற நாடுகளில் இடம்பெற்றுவரும் மக்களாட்சியை நோக்கிய மாற்றங்கள், உலகில் வேகமாக வளர்ந்துவரும் ஆப்ரிக்கப் பொருளாதார முன்னேற்றம், ஆசியா
மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வளர்ந்துவரும் பொருளாதாரம் போன்ற
முக்கியமான முன்னேற்றங்களைப் பாராட்டிப் பேசினார் பான் கி மூன்.
இந்த ஐ.நா.பொது அவையின் ஆண்டுக் கூட்டம் வருகிற அக்டோபர் முதல் தேதியன்று நிறைவடையும்
7. உலகை வெப்பமாக்கிவரும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஓர் அனைத்துலக ஒப்பந்தம் அவசியம்
செப்.26,2012. ஐ.நா. பொது அவையின் 67வது அமர்வில் உரையாற்றிய மார்ஷல் தீவுகளின் அரசுத் தலைவர் Christopher Loeak, உலகை
அதிகம் வெப்பமாக்கிவரும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு
சட்டரீதியான ஒப்பந்தம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படுமாறு கேட்டுக்
கொண்டார்.
பசிபிக் தீவு நாடாகிய மார்ஷலின் வேளாண்மை, பசிபிக் பெருங்கடல் மட்டத்தின் உயர்வால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதற்கு அனைத்துலக சமுதாயத்தின் உதவி தேவை எனவும் ஐ.நா.வில் பேசினார் அரசுத் தலைவர் Loeak.
மேலும், மற்றொரு பசிபிக் தீவு நாடாகிய Nauru அரசுத் தலைவர் Sprent Dabwido ஐ.நா.வில் பேசிய போது, வெளிமண்டலத்தைப் பாதிக்கும் வாயுக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அதனால் தங்களைப் போன்ற சிறிய தீவு நாடுகள் கடல்மட்ட உயர்வால் கடும் பேரழிவை எதிர்நோக்குவதாகவும் விளக்கினார்.
8. காது கேளாதோர் வாரம் செப்டம்பர் 24-30
செப்.26,2012. சமூகத்தில், காதுகேளாதோர் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்களது கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு அவர்களுக்கான வசதிகளை உருவாக்க, ஒவ்வோர்
அரசும் பரிசீலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர்
இறுதி வாரம் காதுகேளாதோர் வாரம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டு இவ்வாரம் இத்திங்கள் முதல் வருகிற ஞாயிறுவரைக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிக சப்தத்தை கேட்பதால்கூட காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர் இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுவாக மனிதரது காது 20 ஹெர்ட்ஸில் இருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ்வரை கேட்கும் திறன் பெற்றது.
robert john kennedy: Catholic News in Tamil - 25/09/12
robert john kennedy: Catholic News in Tamil - 25/09/12: 1. முஸ்லீம் தலைவர்களிடம் மாரனைட்ரீதி தலைவர் : மதங்களுக்கு எதிரான அவமதிப்புகள் வேண்டாம் 2. பெரு கர்தினால் : விசுவாச ஆண்டு , அருள்பணியாள...
Catholic News in Tamil - 25/09/12
1. முஸ்லீம் தலைவர்களிடம் மாரனைட்ரீதி தலைவர் : மதங்களுக்கு எதிரான அவமதிப்புகள் வேண்டாம்
2. பெரு கர்தினால் : விசுவாச ஆண்டு, அருள்பணியாளர்களுக்கு மனமாற்றத்தின் காலமாக இருக்க வேண்டும்
3. விசுவாச ஆண்டில் விசுவாசிகள் திருவருட்சாதனங்களில் பங்கேற்க அமெரிக்க ஆயர்கள் அழைப்பு
4. தேர்தலில் விசுவாசத்தின் அடிப்படையில் வாக்களிக்குமாறு லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் வலியுறுத்தல்
5. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டையொட்டி புதிய ஆவணப்படம்
6. இத்தாலியின் அசிசியில் புறவினத்தார் முற்றம்
7. ஆப்ரிக்காவில் முஸ்லீம்களைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது
8. சிரியாவில் சிறார் எதிர்கொள்ளும் கொடுமைகள் திகைக்க வைக்கின்றன, பிரிட்டன் பிறரன்பு நிறுவனம்
9. சார்ஸ் நுண்கிருமியை ஒத்த புதிய கிருமி: மருத்துவர்கள் எச்சரிக்கை
10. யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. முஸ்லீம் தலைவர்களிடம் மாரனைட்ரீதி தலைவர் : மதங்களுக்கு எதிரான அவமதிப்புகள் வேண்டாம்
செப்.25,2012.
மதங்களுக்கு எதிரான அனைத்து அவமதிப்பு நடவடிக்கைகளும் தடை
செய்யப்படுவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாறு லெபனன் மாரனைட்ரீதி
கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Beshara Rai ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
லெபனனின் Bkerkeயிலுள்ள
மாரனைட்ரீதி தலைமையகத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ-இசுலாம் கூட்டத்தில் இந்தத்
தனது பரிந்துரையைப் பொதுப்படையாக முன்வைத்தார் முதுபெரும் தலைவர் Rai.
'The Innocence of Muslims' என்ற
அமெரிக்கத் திரைப்படம் முஸ்லீம்களையும் இறைவாக்கினரையும் மட்டுமல்லாமல்
கிறிஸ்தவர்களையும் மற்ற மதத்தினரையும் புண்படுத்துவதாய் இருக்கின்றது
என்பதால், இந்தத்
திரைப்படத்துக்கு எதிரான கண்டனங்களை மட்டும் ஏற்பதோடு நிறுத்திவிடாமல்
மதங்களைக் கேலிசெய்யும் அனைத்தையும் தடைசெய்வதற்கு ஐ.நா.வில் தீர்மானம்
நிறைவேற்றப்படுமாறு அனைத்துலக சமுதாயத்தையும் விண்ணப்பிப்போம் என்றும் கூறினார் முதுபெரும் தலைவர் Rai.
மேலும், மதங்களை அவமதிக்கும் இத்தகைய செயல்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு ஒன்றை ஐ.நாவும், அனைத்துலக சமுதாயமும் எடுக்குமாறு முதுபெரும் தலைவர் Rai, இம்மாதம் 13ம் தேதியன்று ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. பெரு கர்தினால் : விசுவாச ஆண்டு, அருள்பணியாளர்களுக்கு மனமாற்றத்தின் காலமாக இருக்க வேண்டும்
செப்.25,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் விசுவாச ஆண்டு, அருள்பணியாளர்களுக்கு உண்மையான மனமாற்றத்தின் காலமாக இருக்க வேண்டும், இதன்மூலம்
மற்றவர்கள் அருள்பணியாளர்களில் கடவுளின் பிரசன்னத்தைக் காண முடியும் என்று
பெரு நாட்டுக் கர்தினால் ஹூவான் லூயிஸ் சிப்பிரியானி கூறினார்.
உலகளாவியக்
கத்தோலிக்கத் திருஅவையில் வருகிற அக்டோபர் 11ம் தேதி தொடங்கவிருக்கும்
விசுவாச ஆண்டு குறித்து லீமா உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும்
துறவிகளுக்கும் உரையாற்றிய கர்தினால் சிப்பிரியானி இவ்வாறு கூறினார்.
திருப்பலி நிகழ்த்துவது, மறையுரைகளுக்குத் தயார் செய்வது, மறையுரை
ஆற்றுவது ஆகியவற்றில் அருள்பணியாளர்கள் தங்களது அகவாழ்வின் மாற்றத்தை
வெளிப்படுத்த வேண்டுமெனவும் லீமா கர்தினால் சிப்பிரியானி வலியுறுத்தினார்.
இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு மற்றும் கத்தோலிக்கத்
திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியானதன் 20ம் ஆண்டு நிறைவுகளை முன்னிட்டு
அறிவிக்கப்பட்டிருக்கும் விசுவாச ஆண்டு 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி
தொடங்கி 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று
நிறைவடையும்.
3. விசுவாச ஆண்டில் விசுவாசிகள் திருவருட்சாதனங்களில் பங்கேற்க அமெரிக்க ஆயர்கள் அழைப்பு
செப்.25,2012. திருவருட்சாதனங்களில் பங்கேற்பு, செபம், செயல்பாடு
ஆகியவற்றின் வழியாக மலரவிருக்கும் விசுவாச ஆண்டில் விசுவாசிகள்
பங்கெடுக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கேட்டுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நற்செய்தி அறிவிப்பு பணிக்குழுத் தலைவரான Green Bay ஆயர் David L. Ricken வெளியிட்டுள்ள அறிக்கையில், விசுவாசத்தையும்
நற்செய்தி அறிவிப்புப்பணியையும் புதுப்பிப்பதற்கு திருஅவைக்கு விசுவாச
ஆண்டு தக்க தருணமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விசுவாசிகளின் ஆன்மீக வாழ்க்கையின் வளர்ச்சியில் ஒப்புரவு திருவருட்சாதனம் முக்கிய அங்கம் வகிக்கின்றது என்றும் ஆயர் Ricken கூறியுள்ளார்.
4. தேர்தலில் விசுவாசத்தின் அடிப்படையில் வாக்களிக்குமாறு லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் வலியுறுத்தல்
செப்.25,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற நவம்பரில் இடம்பெறவிருக்கும் தேர்தலில், கத்தோலிக்கர்
தங்களது விசுவாசத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்த வாழ்வை அடையும் எண்ணத்தில்
வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் Jose Gomez .
குடிமக்கள் என்ற முறையில் தேர்தலில் பங்கெடுப்பதற்கு முக்கியமான கடமை உள்ளது, இதனை எப்பொழுதும் கடவுளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையின் ஒளியில் நிறைவேற்ற வேண்டுமெனவும் பேராயர் Gomez, The Tidings என்ற இதழில் எழுதியுள்ளார்.
நாம் எப்பொழுதும் கிறிஸ்து மற்றும் திருஅவையின் மனநிலையோடு இணந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் எனவும் பேராயர் கூறியுள்ளார்.
5. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டையொட்டி புதிய ஆவணப்படம்
செப்.25,2012.
வருகிற அக்டோபர் 11ம் தேதியன்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு அந்நாளில்
இப்பொதுச்சங்கம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை வெளியிடுவதற்குத் திட்டமிட்டு
வருகிறது திருப்பீட சமூகத்தொடர்பு அவை.
வத்திக்கான்
ஒளிப்பட ஆவணக்காப்பகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 200மணி நேரங்களுக்கு
அதிகமான படங்களிலிருந்து இந்தப் புதிய ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது Micromegas சமூகத்தொடர்பு நிறுவனம்.
இப்பொதுச்சங்கம் குறித்து இதுவரை வெளியிடப்படாத படங்கள், குறிப்புகள், உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த திருஅவைத் தலைவர்களின் சொந்த அனுபவங்கள், பல்வேறு
கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இப்பொதுச்சங்கம் குறித்த
வரலாற்றுக் குறிப்புகள் போன்றவை இந்தப் புதிய ஆவணப்படத்தில் உள்ளன.
1959ம் ஆண்டு சனவரியில் திருத்தந்தை அருளாளர் 23ம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டுவது குறித்து அறிவித்தது, அதன் பின்னர் அதற்கென நடைபெற்ற மூன்றாண்டு தயாரிப்புகள், இப்போதைய கிறிஸ்தவ உலகத்திற்கு இப்பொதுச்சங்கம் முன்வைக்கும் புதிய தூண்டுதல்கள் போன்வற்றையும் இந்த ஆவணப்படம் உள்ளடக்கியுள்ளது.
6. இத்தாலியின் அசிசியில் புறவினத்தார் முற்றம்
செப்.25,2012. இத்தாலியின் அசிசியில் வருகிற அக்டோபர் 5,6 தேதிகளில் "அறியாத கடவுள்"
என்ற தலைப்பில் புறவினத்தார் முற்றம் என்ற கலந்துரையாடல் கூட்டம்
நடைபெறும் என இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
திருப்பீடக் கலாச்சார அவையும் "Oicos Riflessioni"
என்ற கழகமும் இணைந்து நடத்தும் இக்கூட்டத்தை இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ
நாப்பொலித்தானோ ஆரம்பித்து வைப்பார். இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட
சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
கடவுளை
நம்புவோர் மற்றும் கடவுளை நம்பாதவர்களுக்கு இடையே ஒரு நிலையான உரையாடலை
ஏற்படுத்தும் புறவினத்தார் முற்றம் என்ற திட்டத்தின்கீழ் இத்தகைய
கூட்டங்கள், திருப்பீடக்
கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசியின் தலைமையில்
ஏற்கனவே பல ஐரோப்பியத் தலைநகரங்களில் நடத்தப்பட்டுள்ளன
7. ஆப்ரிக்காவில் முஸ்லீம்களைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது
செப்.25,2012. ஆப்ரிக்கக் கண்டத்தில் முஸ்லீம்களைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதாக புதிய மதங்கள் குறித்து ஆய்வு செய்யும் CESNUR மையம் அறிவித்தது.
மொரோக்கோவின் El Jadida பல்கலைக்கழகத்தில் CESNUR மையம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசிய இம்மையத்தின் தலைவர் Massimo Introvigne, தற்போது ஆப்ரிக்க மக்களில் கிறிஸ்தவர்கள் 46.53 விழுக்காடும் முஸ்லீம்கள் 40.46 விழுக்காடும், ஆப்ரிக்க மரபு மதத்தினர் 11.8 விழுக்காடும் உள்ளனர் என அறிவித்தார்.
ஆப்ரிக்கக் கண்டத்தில் 31 நாடுகளில் கிறிஸ்தவர்களும், 21 நாடுகளில் முஸ்லீம்களும், 6 நாடுகளில் ஆப்ரிக்க மரபு மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர் எனவும் அம்மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1900மாம் ஆண்டில் ஒரு கோடிக் கிறிஸ்தவர்கள் இருந்த ஆப்ரிக்காவில் 2012ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 50 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஆப்ரிக்காவில் கத்தோலிக்கத்தை அனுசரிக்கும் மக்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் கத்தோலிக்கத்தை அனுசரிக்கும் மக்களைவிட அதிகம் என்றும் இத்தாலிய சமூகவியலாளரான Massimo Introvigne அறிவித்தார். இக்கூட்டத்தில் 18 நாடுகளிலிருந்து சுமார் 70 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
8. சிரியாவில் சிறார் எதிர்கொள்ளும் கொடுமைகள் திகைக்க வைக்கின்றன, பிரிட்டன் பிறரன்பு நிறுவனம்
செப்.25,2012. கடும் சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவில் திகைக்க வைக்கும் சித்ரவதைகள், கைதுகள், கடத்தல்கள் போன்றவற்றைச் சிறார் எதிர்கொள்கின்றனர் என்றும் இந்தக் கொடுமைகள் பதிவு செய்யப்பட வேண்டியது நல்லது என்றும் Save the Children என்ற பிரிட்டன் பிறரன்பு நிறுவனம் கூறுகிறது.
சிரியாவின் அகதிச் சிறாரிடமிருந்து கேட்டறிந்த தகவல்களை வைத்து இவ்வாறு கூறுவதாகத் தெரிவித்த Save the Children நிறுவனம், சிறார் வாழும் இடங்களில் ஐ.நா.வின் இருப்பு அதிகம் தேவை என்றும் வலியுறுத்துகிறது.
இத்திங்களன்று
தொடங்கப்பட்டுள்ள ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் சிரியா நாட்டுச் சிறார்
குறித்து கவனம் செலுத்தப்படுமாறும் கேட்டுள்ளது Save the Children நிறுவனம்.
ஏறக்குறைய ஒவ்வொரு குழந்தையும் தனது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டதைப் பார்த்திருக்கின்றது என்றுரைக்கும் அந்நிறுவனம், சிரியாவில் கடந்த 18 மாதங்களாக இடம்பெற்றுவரும் சண்டைகள் குறித்த ஆவணங்களைத் தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தது.
9. சார்ஸ் நுண்கிருமியை ஒத்த புதிய கிருமி: மருத்துவர்கள் எச்சரிக்கை
செப்.25,2012.
2003ம் ஆண்டில் உலகின் பல பாகங்களிலும் பரவி நூற்றுக்கணக்கானவர்கள்
இறப்பதற்குக் காரணமான சார்ஸ் நுண்கிருமி நோயை ஒத்த புதிய சுவாசநோய் ஒன்றை
பிரிட்டன் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று ஊடகச் செய்தி ஒன்று
கூறுகிறது.
கத்தாரிலிருந்து இலண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்ட 49 வயது ஆண் ஒருவரிடம் இந்த நோய்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நுண்கிருமியால் எவ்வகையான ஆபத்து ஏற்படலாம் என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள் என்றும் ஊடகச் செய்தி கூறுகிறது.
பொதுவாக, சுவாசப்பாதையைத் தாக்கி, சாதாரண
தடிமனையும் சார்ஸ் எனப்படுகின்ற கடுமையான திடீர் சுவாசநோயையும்
ஏற்படுத்துகின்ற ஒருவகை நுண்கிருமியை உள்ளடக்கிய பெரிய நுண்கிருமி
குடும்பத்தை கொரோனா நுண்கிருமி என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
ஹாங்காங்கிலிருந்து
முப்பதுக்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி ஏறத்தாழ 800 பேரைக் காவுகொண்ட
இந்தச் சார்ஸ் நோய் முழுமையாக ஒழிக்கப்படாவிட்டாலும் அது பரவுவது 2003ம
ஆண்டில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
10. யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
செப்.25,2012. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆண்டுதோறும் ஏறக்குறைய ஐயாயிரம் புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் நோக்கில் தெல்லிப்பளை மருத்துவமனைக்கு அருகில் 26 கோடி ரூபாய்ச் செலவில் புற்றுநோய் மருத்துவமனையொன்று அமைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் புற்றுநோயாளிகள் தற்போது மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையில் ஆண்டுதோறும் இருபதாயிரம் பேர் புற்றுநோயினால் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
robert john kennedy: Catholic News in Tamil - 24/09/12
robert john kennedy: Catholic News in Tamil - 24/09/12: 1. திருத்தந்தை: தாழ்மை இறைவனின் வழி 2. நைஜீரியாவில் கத்தோலிக்கப் பேராலயம் தாக்கப்பட்டது , 5 பேர் பலி 3. கிறிஸ்தவக் கோவில் ...
Catholic News in Tamil - 24/09/12
1. திருத்தந்தை: தாழ்மை இறைவனின் வழி
2. நைஜீரியாவில் கத்தோலிக்கப் பேராலயம் தாக்கப்பட்டது, 5 பேர் பலி
3. கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசுத்தலைவர் கண்டனம்
4. தேவ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் சிறுமியை பாலர் நீதிமன்றத்தில் விசாரிக்க நீதிபதி உத்தரவு
5. 25ம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்படுகிறது
6. சேலம் மாவட்டத்தில் காசநோயாளிகள் அதிகரிப்பு: மருத்துவர் அதிர்ச்சித் தகவல்
7. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பெண்களில் மூன்றில் ஒருவர் புகையிலைப் பொருட்களுக்கு அடிமை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை: தாழ்மை இறைவனின் வழி
செப்.24,2012.
அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் மாறுவதில் இயேசு
கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடக்குமாறு கிறிஸ்தவர்களுக்கு
அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடவுளும்
மனிதரும் வேறுபடுவதில் தற்பெருமை முக்கியமானதாக இருக்கின்றது என்று
காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இஞ்ஞாயிறன்று ஆற்றிய நண்பகல் மூவேளை செப உரையில்
கூறினார் திருத்தந்தை.
மிகவும் சிறியவர்களாக இருக்கும் நாம் முதலில் பெரியவர்களாக இருப்பதற்கு விரும்புகிறோம், ஆனால்
உண்மையிலேயே உன்னதமான கடவுள் தம்மைத் தாழ்த்துவதற்குப் பயப்படவில்லை
மற்றும் தம்மைக் கடையராகவும் ஆக்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தமது
மரணத்தையும் உயிர்ப்பையும் இயேசு தமது சீடர்களுக்கு அறிவித்தபோது அதை
அவர்கள் புரிந்துகொள்ளவில்லை மற்றும் அதைப் பற்றி அவரிடம் கேட்பதற்குப்
பயந்தது குறித்து விளக்கும் இஞ்ஞாயிறு மாற்கு நற்செய்திப் பகுதியை
விளக்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
யார் பெரியவர் என்று தமது நெருங்கிய சீடர்கள் தங்களுக்குள் வாதாடிக்கொண்டிருந்ததற்குப் பதிலளித்த இயேசு, தங்களுள் முதல்வராக இருக்க விரும்புகிறவர் தங்களில் கடைசியானவராகவும் தொண்டராகவும் இருக்கட்டும் என்று கூறினார் எனவும், இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே மிக அகலமான இடைவெளி இருந்தது, இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் இயேசுவும் அவரது சீடர்களும் இருவேறு சிந்தனை ஓட்டத்தில் இருந்தனர் எனவும் கூறினார் திருத்தந்தை.
கடவுளது மாறாத நியதி எப்பொழுதும் நம்முடையதைவிட வேறுபட்டது எனவும் கூறிய திருத்தந்தை, கடவுளது எண்ணங்கள் நம் எண்ணங்கள் அல்ல, கடவுளுடைய வழிகள் நம் வழிகள் அல்ல என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளையும் திருப்பயணிகளுக்கு நினைவுபடுத்தினார்.
எனவே நம் ஆண்டவரைப் பின்செல்லுவதற்கு, ஒவ்வொரு மனிதரின் எண்ணங்களிலும் வாழும் முறையிலும் மாற்றம் கொண்டுவரும் ஓர் ஆழமான மனமாற்றம் தேவைப்படுகின்றது, இதற்கு நமது இதயங்கள் ஒளிபெற்று உள்ளூர மாற்றம் பெறுவதற்கு அவற்றைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இதற்கு அன்னைமரியாவின் உதவியைக் கேட்போம் எனத் தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இவ்வுரையின் இறுதியில் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியும், மதங்களிடையே அமைதிக்கான உரையாடலும் இடம்பெறவும், அப்பகுதி கிறிஸ்தவர்களுக்காகவும் செபிக்குமாறும் திருப்பயணிகளிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2. நைஜீரியாவில் கத்தோலிக்கப் பேராலயம் தாக்கப்பட்டது, 5 பேர் பலி
செப்.24, 2012. நைஜீரியாவின் Bauchi எனுமிடத்திலுள்ள
புனித யோவான் கத்தோலிக்கப் பேராலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு
தாக்குதலில் 5 பேர் இறந்துள்ளனர் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.
இஞ்ஞாயிறு
காலை திருப்பலி முடிந்து விசுவாசிகள் திரும்பிக் கொண்டிருந்தபோது
நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் அவ்விடத்திலேயே இரு
கிறிஸ்தவர்களும், தற்கொலைப்படைத்
தாக்குதலை நடத்தியவரும் உயிரிழந்தனர். காயமடைந்த ஏறத்தாழ 50 பேரில்
பின்னர் மருத்துவமனையில் ஒரு தாயும் குழந்தையும் உயிரிழந்தனர்.
இத்தாக்குதல் குறித்து நைஜீரியாவின் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
3. கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசுத்தலைவர் கண்டனம்
செப்.24,2012. பாகிஸ்தானின் Sarhadi லூத்தரன் கோவில் தீக்கிரையாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்ற அந்நாட்டு அரசுத்தலைவர் Asif Ali Zardari, இசுலாமிய
தீவிரவாத நடவடிக்கைகளிலிருந்து பாகிஸ்தான் கிறிஸ்தவக் கோவில்களுக்குப்
பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இறைவாக்கினர் முகமதுவைக் கேலிசெய்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புக்காட்டும் விதமாக, பாகிஸ்தானில் இடம்பெறும் வன்முறைகளின் ஒருபகுதியாக லூத்தரன் கோவில், அதன் அருகிலிருந்த கல்விக்கூடம் மற்றும் ஆயர் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதைப்பற் றிக் குறிப்பிட்டபோது இவ்வாறு தெரிவித்தார் அரசுத்தலைவர்.
பொதுச்சொத்துக்களையோ, தனியார்
சொத்துக்களையோ அதிலும் குறிப்பாக மதம் தொடர்புடையவைகளை
அழிவுக்குள்ளாக்குவது இசுலாம் மதத்திற்கு எதிராகச் செல்வதாகும் என்றார்
அரசுத்தலைவர் Ali Zardari.
இதே Sarhadi லூத்தரன் கிறிஸ்தவக் கோவில் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. தேவ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் சிறுமியை பாலர் நீதிமன்றத்தில் விசாரிக்க நீதிபதி உத்தரவு
செப்.24,2012.
இசுலாமியர்களின் புனித நூலை எரித்தார் எனப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள
பாகிஸ்தான் கிறிஸ்தவச் சிறுமி பாலர் சீர்திருத்தச் சட்டங்களின்கீழ்
விசாரிக்கப்பட ஆணை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
Rimsha Masih என்ற
இந்தச் சிறுமியின் மீதான வழக்கு சிறையில் வைத்து விசாரிக்கப்படவேண்டும்
என்ற மாவட்ட நிர்வாகத்தின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்த இஸ்லாமாபாத்
நீதிமன்றம், 14 வயதே என நிரூபிக்கப்பட்டுள்ள அச்சிறுமியை சிறார்களுக்கான நீதிமனன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனப் பணித்துள்ளது. இதற்கிடையே, அக்கிறிஸ்தவச்
சிறுமியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை
என நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது பாகிஸ்தான் காவல்துறை.
கல்வியறிவற்ற, அதேவேளை
மனநிலை பாதிக்கப்பட்ட இந்த 14 வயதுச் சிறுமி மீது பொய்யானக் குற்றச்சாட்டை
முன்வைத்த இசுலாமிய குரு ஒருவர் தற்போது தேவ நிந்தனைக் குற்றச்சாட்டுடன்
சிறைவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சிறுமியின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக, இந்த
இசுலாமிய குருவே புனித நூலான குரானின் சில பக்கங்களை எரித்துள்ளது தற்போது
அவர் மீதே தேவ நிந்தனைக் குற்றச்சாட்டிற்கு வழிவகுத்துள்ளது.
5. 25ம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்படுகிறது
செப்.24,2012.
இலங்கையில் இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்திருந்த 3 இலட்சம் மக்கள்
தங்கவைக்கப்பட்டிருந்த செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்
செப்டம்பர் 25ம் தேதியுடன், அதாவது இச்செவ்வாய்க் கிழமையுடன் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மனிக்பாம்
முகாமில் மிஞ்சியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 361
குடும்பங்களையும் அவர்களது பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருப்பதாக அம்மக்களிடம் ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனிக்பாம்
முகாமை மூட வேண்டும் என்ற அதிகாரிகளின் முடிவினால் தாங்கள் விருப்பமில்லாத
ஒரு நிலையிலேயே வேறிடத்தில் சென்று குடியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக
அங்குள்ள மக்கள் ஏற்கனவே குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பகுதியில் இன்னமும் படைத்தளங்கள் அகற்றப்படாததுடன், கண்ணிவெடி
அகற்றல் நடவடிக்கையும் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்தப் பகுதி மக்களை
முகாமில் இருந்து வெளியேற்றி வேறு இடங்களில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல்
முகாம்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
6. சேலம் மாவட்டத்தில் காசநோயாளிகள் அதிகரிப்பு: மருத்துவர் அதிர்ச்சித் தகவல்
செப்.24,2012. சேலம் மாவட்டத்தில், காசநோயாளிகளின் எண்ணிகை அதிகரித்து வருகிறது என மாவட்ட காசநோய் அதிகாரி சுரேஷ் கூறினார்.
சேலம் அரசு மருத்துவமனை காசநோய் சிகிச்சை மையத்தில், காசநோய்த் தடுப்பு மன்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது இத்தகவலை வெளியிட்ட மாவட்ட காசநோய் அதிகாரி சுரேஷ், சேலம் மாவட்டத்தில், தற்போது 800 காசநோயாளிகள் உள்ளதில், 375 பேர் புதிய நோயாளிகள் என்றார்.
காலாண்டுக்கு ஒருமுறை, காசநோயாளிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதன் மூலம், ஆண்டுதோறும், காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது என்றார் அவர்.
காசநோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இருமும்போது, அது காற்றில் கலந்து, மற்றவர்களுக்குப் பரவுவதால், அவ்வாறு அது பரவாத வகையில், வாயில் துணி வைத்து இரும வேண்டும் என்ற அறிவுரையையும் முன்வைத்த மருத்துவ அதிகாரி சுரேஷ், இரு வாரங்களுக்குத் தொடர்ந்து சளி, இருமல் இருந்தால், காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் எனவும் கூறினார்.
7. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பெண்களில் மூன்றில் ஒருவர் புகையிலைப் பொருட்களுக்கு அடிமை
செப்.24,2012. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மிசோரமில், ஆண்களில், இரண்டுக்கு ஒருவரும், பெண்களில், மூன்றுக்கு ஒருவரும், புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர் என நலவாழ்வுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மிக அதிகமாக உள்ளது, புகையிலைப் பழக்கத்தால், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், நடுத்தர வயதினரும், வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டுள்ளனர் எனவும் கவலையை வெளியிட்டனர் இந்த அதிகாரிகள்.
மிசோரம் மக்களில் புகையிலைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 67 விழுக்காடு எனவும், நாகாலாந்தில், இது 57 விழுக்காடு எனவும் கூறும் அதிகாரிகள், புகையிலைத் தொடர்பான நோய்கள் அதிகம் பாதித்த மக்களைக் கொண்ட மாநிலமாக நாகாலாந்து உள்ளது என மேலும் தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...