உலகில் மூன்றில் இரண்டு பெண் செய்தியாளர்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காகின்றனர் : அமெரிக்க ஆய்வில் தகவல்
உலகம் முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு பெண் செய்தியாளர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பெண்கள் மீடியா பவுண்டேசன் என்ற அமைப்பும், லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சர்வதேச செய்தி பாதுகாப்பு அமைப்பும் இணைந்து 822 பெண் செய்தியாளர்களிடம் பாலியல் பிரச்சனைகள் தொடரபாக கேள்வி கேட்டது, அவர்களில் பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிவுள்ளதாகவும், ஆனால் இது குறித்து தெரிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளதாக சர்வேயினை வெளியிட்டோர் தெரிவித்துள்ளனர்.
சர்வே நடத்தப்பட்ட மொத்த பெண்களில் 82 சதவீதம் செய்தியாளர்கள் என்றும், அவர்களில் 49 சதவீதம் பேர் பத்திரிகையில் பணியாற்றுபவர்கள் என்றும், 24 பேர் வாரஇதழ்களில் பணியாற்றுபவர்கள் என்றும் 21 சதவீதம் தொலைக்காட்சியிலும், 16 சதவீதம் பேர் ரேடியோவில் பணியாற்றுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சர்வேயில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளான பெண் செய்தியாளர்களில் 29 சதவீத செய்தியாளர்கள் ஆசியா மற்றும் பசுபிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment