மன்னார் ஆயருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு
வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும்,மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பென்று இடம் பெற்றது.
,இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சுகாதார,சுதேச வைத்திய அமைச்சர் பி.சத்தியலிங்கம்,வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா,வைத்திய கலாநிதி.ஜீ.குணசீலன்,அயூப் அஸ்மீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காணி பிரச்சினைகள்,இராணுவத்தின் தலையீடு,இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிப்பு,அமைச்சர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாடுகள்,மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்,மீள் குடியேற்ற கிராம மக்களின் பிரச்சினைகள் உற்பட மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை மன்னார் ஆயர் உற்பட குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்களும முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment