மெக்சிகோவில் ஓடும் கார்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பு
மெக்சிகோவில் ஓடும் கார்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி, அணுசக்தி, காற்று, நீர் என்று பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஓடும் கார்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பு தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை மெக்சிகோவின் தொழில் முனைவோர்கள் கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்து தங்கு தடையின்றி இல்லாத பகுதிகளில் ஓடும் கார்களில் இருந்து மிகக் குறைந்த செலவில் மின்சாரம் தயாரித்துள்ளனர்.
தெருக்களில் 5 செ.மீட்டர் உயரத்துக்கு வேகத்தடைகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஏற்படும் காற்றழுத்தம் மூலம் அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் மின்சாரம் உருவாக்கியுள்ளனர்.
இதே முறையை பயன்படுத்தி மெக்சிகோவின் பல நகரங்களில் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தங்கு தடையற்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலும் இம்முறையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment