Wednesday, 4 December 2013

ஜெயிலில் இருந்துகொண்டு ஃபேஸ்புக்கில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட கைதி

ஜெயிலில் இருந்துகொண்டு ஃபேஸ்புக்கில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட கைதி

Source: Tamil CNN கோழிக்கோடு ஜெயிலில் இருக்கும் கொலைக்குற்றவாளி கைதி ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் தன்னையும், தன்னுடைய நண்பர்களையும் புகைப்படம் எடுத்து, புதிதாக ஒரு ஃபேஸ்புக் கணக்கு துவங்கி,அதில் புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். இந்த தகவல் கேரளா சிறைத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பொதுவாக சிறைகளில் செல்போன் உபயோகிப்பதே கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செல்போனில் புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார் ஒரு கைதி. அவர் பெயர் சந்திரசேகரன். இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர். இவருடன் சேர்ந்து கிர்மானி மனோஜ், கொடி சுனி, முகமது ஷாபி, அனுப், சினோஜ் ஆகியோர் ஜெயிலில் இருக்கின்றனர்.
இவர்களில் சந்திரசேகரன், மற்றும் மனோஜ் கிர்மானி ஆகியோர் மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்து, அதை தங்களது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்களை கேரள மாநில தொலைக்காட்சி ஒன்று செய்தியாக வெளியிட்டது. இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள ஜெயில் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு கேரள உள்துறை மந்திரி ஜெயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment