Tuesday, 3 December 2013

சீன அகழ்வாராய்ச்சியில் ஒரே இடத்தில் கிடைத்த 80 பெண்களின் மண்டையோடுகள்

சீன அகழ்வாராய்ச்சியில் ஒரே இடத்தில் கிடைத்த 80 பெண்களின் மண்டையோடுகள்

Source: Tamil CNN
சீனாவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 80 பெண்களின் மண்டையோடுகள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அடிமையாக வைக்கப்பட்டு பின்பு கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
சீனாவில் உள்ள அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது neolithic stone city என்ற பகுதியில் உள்ள Shaanxi என்ற பழமையான நகரத்தில் ஒரே இடத்தில் 80 மண்டையோடுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இவையாவும் பெண்களின் மண்டையோடுகள் என்பது தெரியவந்துள்ளது. ஒரே இடத்தில் இந்த மண்டையோடுகள் கிடைத்துள்ளதால் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சீனாவில் பழங்காலத்தில் நடந்த மத வன்முறையில் பலர் கூட்டம் கூட்டமாய கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுபோன்ற வன்முறை ஒன்றில் இந்த பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறபடுகிறது.
இந்த பகுதியில் 1976ஆம் ஆண்டுமுதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. சீனாவின் Shaanxi Provincial Institute of Archaeology தலைவர் Sun Zhouyong அவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, மண்டையோடுகளுக்கு உரிய பெண்கள் முதலில் தாக்கப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment