Wednesday, 4 December 2013

1000 கிலோ வெடிபொருளை சுமந்து செல்லும் பிரித்வி II அணுவாயுத ஏவுகணை : வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

1000 கிலோ வெடிபொருளை சுமந்து செல்லும் பிரித்வி II அணுவாயுத ஏவுகணை : வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

source: Tamil CNN
இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட அணுசக்தி ஏவுகணை பிரித்வி II, ஒடிசா மாநிலம் பலசோர் அருகே உள்ள சண்டிபூரிலிருந்து இன்று காலை 10.05 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பாதுகாப்பு படையினரால் சோதிக்கப்பட்ட இந்த பிரித்வி II ஏவுகணை, 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்த இலக்கை அடைந்து மிக துல்லியமாக தாக்கியது. நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கும் இந்த ஏவுகணையானது நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகன ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
500 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான வெடிப்பொருட்களை சுமத்து செல்லும் திறன் படைத்த இந்த ஏவுகணை திரவ எரிபொருள் இரட்டை என்ஜின்களால் செலுத்தப்படுகின்றன. எதிரியின் இலக்குகளை மிகவும் சூழ்ச்சியாக வளைந்து சென்று தாக்கக்கூடிய வகையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற ஏவுகணை சோதனைகள், எதிரிகளில் எந்தவித நடவடிக்கைகளையும் சமாளிக்கும் விதத்தில் இந்தியாவை ஆயத்தநிலையில் வைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment