தினமும் 10 இலட்சம் கி.மீ பயணம் செய்யும் மங்கள்யான்
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் தினமும் 10 லட்சம் கிமீ தூரம் பயணம் செய்கிறது. மங்கள்யான் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த 5ம் திகதி பிற்பகல் 2.38 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
1, 350 கிலோ எடை கொண்ட மங்கள்யான் புவிவட்டப் பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கான பாதைக்குள் நுழைந்தது.இந்நிலையில் மங்கள்யான் நேற்று காலை நிலவு வட்டப் பாதையையும் தாண்டியுள்ளது.
இந்த விண்கலம் தினமும் 10 லட்சம் கிமீ தூரம் பயணிப்பதாக இஸ்ரோ வட்டாரம் தெரிவித்துள்ளது. மங்கள்யானின் செயல்பாடுகளை பெங்களூரில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மங்கள்யான் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment