Tuesday, 26 November 2013

பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்த டிராபிக் போலீஸ் : அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்த டிராபிக் போலீஸ் : அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

Source: Tamil CNN
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள SAN ANTONIO – என்ற நகரில் ஒரு டிராபிக் போலீஸ் அதிகாரி பணியில் இருந்தபோது 19 வயது இளம்பெண்ணை தனது காருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்த அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
டெக்ஸாஸ் மாநிலத்தில் SAN ANTONIO – நகரில் டிராபிக் போலீஸ் அதிகாரியாக Jackie Neal, என்பவர் ஏழு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் பணியில் இருந்தபோது, அந்த வழியே வந்த 19 வயது இளம்பெண்ணை மறித்து, தனது காருக்குள் இழுத்து சென்று பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இந்த விஷயத்தை வெளியே கூறினார், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தன்னுடைய பெற்றொர்களுடன் விஷயத்தை கூறி காவல்துறையினர்களிடம் புகார் செய்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீசார் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மைதான் என்று மருத்துவ சான்றிதழ் கிடைத்ததன் அடிப்படையில் டிராபிக் போலீஸ் அதிகாரி Jackie Neal ஐ அதிரடியாக கைது செய்தனர். அவர் பணியில் இருந்தபோது பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...