Saturday, 23 November 2013

இணையத்தின் ஜனநாயகப் பலன்களுக்கு அச்சுறுத்தல் : இணைய வலையமைப்பை உருவாக்கியவர் எச்சரிக்கை

இணையத்தின் ஜனநாயகப் பலன்களுக்கு அச்சுறுத்தல் : இணைய வலையமைப்பை உருவாக்கியவர் எச்சரிக்கை

 இணையத்தினால் கிடைக்கும் ஜனநாயகப் பலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இணைய வலையமைப்பான, வொர்ல்ட் வைட் வெப்பை (www) உருவாக்கியவரான , சர் டிம் பெர்னெர்ஸ் லீ எச்சரித்திருக்கிறார்.
அரசு கண்காணிப்புகள் மற்றும் தணிக்கைகள் அதிகரித்து வரும் நிகழ்வுகள் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாகவும், இணையத்தில் அந்தரங்க உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க துணிச்சலான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் தவறிழைப்பவர்களைக் காட்டிக்கொடுக்க சமூக இணைய தள ஊடகங்கள் பயன்படுத்தப்படும் விதம் குறித்து பாராட்டியிருக்கிறார்.
உலக அளவில் நடக்கும் தணிக்கை குறித்து தனது அமைப்பு வெளியிடும் உலக இணைய சுட்டெண் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த அறிக்கை இணையத்தின் சமூக மற்றும் அரசியல் ரீதியான தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளைப் பட்டியலிடுகிறது. இந்த ஆண்டு அறிக்கையில் ஸ்வீடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...