இதயநோயை எளிதில் கண்டறியக்கூடிய மருத்துவ சாதனம்: சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு
இரத்த நாளங்கள் பாதிப்பால் தற்காலத்தில் அதிகரித்துவரும் இதய நோயைக்
கட்டுக்குள் கொண்டுவர மருத்துவர்கள் பெரிதும் முயற்சித்து வருகின்றனர்.
இந்தக் காலகட்டத்தில் சென்னையில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக்
கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவினர் இத்தகைய இதய நோய்களை ஆரம்பகாலத்திலேயே
கண்டறிந்துகொள்ள ஆர்ட்சென்ஸ் என்ற புதிய எளிய கருவியைக்
கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு ஆரோக்கியமான நபரின் தமனிகள் இதயத் துடிப்பிற்கேற்ப சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்கும். ஆனால் வயதின் காரணமாக இவை தடித்து செயல்பாடுகள் குறையும்போது இரத்த ஓட்டம் குறைந்து இதய நோய்களுக்கு வழி வகுக்கும். பத்து சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றார்கள்.
இவர்களில் பாதி பேருக்கு மேல் மரணமடைவதற்கு இந்த நோய் காரணமாக உள்ளது .தற்போது இந்த நோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் முறைகள் மிகுந்த பொருட்செலவுடையவையாகவும், இதற்கான தொழில்நுட்பம் தெரிந்தவர்களே அறிந்து கொள்ளக் கூடிய வகையிலும் இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் ஆர்ட்சென்ஸ் கருவி மலிவு விலையில் தயாரிக்கப்பட முடியும் என்பதோடு இதன் மூலம் வரும் முடிவுகளை அனைவராலும் எளிதில் தெரிந்து கொள்ளமுடியும் என்பது இதன் சிறப்பாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,
இந்தக் கருவியின் மூலம் நோயின் அறிகுறியை ஆரம்பகாலப் பரிசோதனைகளிலேயே கண்டறியலாம் என்பதால் இந்த நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்றும் திட்டக்குழுத் தலைவர் டாக்டர் ஜெயராஜ் ஜோசப் கூறுகின்றார்.
இந்தக் கருவியின் மாதிரி வடிவம் கடந்த ஆறு மாதமாக சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருவிக்கான வர்த்தக ரீதியான விற்பனையைத் துவங்கும் முன்னர் அடுத்த வருடம் பல சுகாதார மையங்களில் இந்த ஆர்ட்சென்ஸ் கருவியை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் சுகாதாரத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தின் தலைவரான டாக்டர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்

No comments:
Post a Comment