Saturday, 23 November 2013

கிளிநொச்சியில் 50 தமிழ் குடும்ப பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை: மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிளிநொச்சியில் 50 தமிழ் குடும்ப பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை: மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Source: Tamil CNN
கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ருவரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆர்.ஆனந்தராஜாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நேற்று யாழ்.கிறின் கிராஸ் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் மொழி உரிமை மீறப்படும் சம்பவங்கள், மீள்குடியேற்றம் தடைப்படுவதற்கான காரணங்கள், இராணுவத்தினரின் அடக்கு முறைகள், சமூக விரோதச்சம்பவங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம் காட்டி கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்; ஆர்.ஆனந்தராஜா, தமது ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் முறைப்பாடு வழங்கப்படுமிடத்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
வடக்கில் திட்டமிட்ட சமூகப் பிறழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தக் கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுவதோடு தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க கருத்தடை மருந்தை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அத்தோடு பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இந்த கட்டாய கருத்தடையை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாகவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...