Monday, 20 September 2021

“சிறிய அமல்”, புலம்பெயர்ந்தோரின் துயர்களை நினைவுபடுத்துகின்றது

 

Handspring Puppet நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “சிறிய அமல்”, தங்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள பல புலம்பெயர்ந்த சிறாரை நினைவுபடுத்துவதாக உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 10, இவ்வெள்ளிக்கிழமை காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், “சிறிய அமல் (Little Amal)” என்ற பெயரில் நடைபெற்ற பொம்மலாட்டம், புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது என்று, கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் கூறினார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எடுத்துரைப்பதற்காக, சிரியா நாட்டு புலம்பெயர்ந்த 9 வயது சிறுமி ஒருவரை நினைவுபடுத்தும் முறையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான “சிறிய அமல்” என்ற பொம்மலாட்டப் பொம்மை, துருக்கி நாட்டிலிருந்து இங்கிலாந்து வரை, எட்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்கின்றது.

எங்களை மறக்கவேண்டாம், எங்களைப் புறக்கணிக்கவேண்டாம் என்றும், இந்த பொம்மை விண்ணப்பிக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் தலைமையிலான திருப்பீட சிறிய குழு ஒன்று, இவ்வெள்ளி காலையில் “சிறிய அமல்” என்ற பெரியதொரு பொம்மலாட்டப் பொம்மையை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வரவேற்றது.


“சிறிய அமல்”, பொம்மலாட்டம்

Handspring Puppet நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “சிறிய அமல்”, தங்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள பல புலம்பெயர்ந்த சிறாரை நினைவுபடுத்துவதாகவும், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களின் துன்பங்களை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...