Monday, 20 September 2021

அநீதியாக வெளிநாட்டுச் சிறைகளிலிருப்போர் விடுதலை பெறவேண்டும்

 

மெக்சிக்கோவில் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களுக்காகவும், வெளிநாடுகளில் அநீதியாக சிறைவைக்கப்பட்டிருப்போருக்காகவும் திருத்தந்தை செபம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

மெக்சிக்கோவின் அண்மைய வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களுக்காகவும், வெளிநாடுகளில் அநீதியாக சிறைவைக்கப்பட்டிருப்போருக்காகவும், தன் செபங்களை, ஞாயிற்றுக்கிழமையன்று சமர்ப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியபின், மெக்சிக்கோவின் அண்மைய வெள்ளப்பெருக்கால் உயிழந்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தையும், கவலையையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் மாதம் 7ம் தேதி இடம்பெற்ற பெருமழையால் மெக்சிக்கோவின் Hidalgo மாநிலத்தின் Tula மாநகராட்சியில் Tula மற்றும் Rosas ஆறுகள் நிரம்பி வழிந்ததுடன், மருத்துவமனை உடபட் பல கட்டிடங்களிலும், தெருக்களிலும் வெள்ளம் புகுந்து அழிவை உருவாக்கியது.

கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவமனையின் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதால் 17 நோயாளிகளின் உயிரிழப்பும் இடம்பெற்றது.

மேலும், வெளிநாடுகளில் அநீதியான முறையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகவும் தன் செபங்களை சமர்ப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எண்ணற்றோர்,  வெளிநாட்டுச் சிறைகளில் வாடுவது கவலை தருவதாக உள்ளது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வாறு, அநீதியான முறையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அனைவரும் தங்கள் சொந்த வீட்டிற்கு விரைவில் திரும்ப வழி பிறக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...