Monday, 20 September 2021

அயர்லாந்து மக்களின் அமைதி மற்றும் ஒப்புரவிற்காக செபம்

 


அயர்லாந்து, மற்றும் வட அயர்லாந்து மக்களின் அமைதி, குணப்படுத்தல், மற்றும் ஒப்புரவிற்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்பிக்கையின் செபவழிபாடு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

1921ம் ஆண்டு அயர்லாந்து பிளவுபட்டது, மற்றும், வட அயர்லாந்து உருவாக்கப்பட்டதன் நூறாமாண்டு நினைவு, செப்டம்பர் மாதம் 21ம் தேதி செபவழிபாடுகளுடன் நிறைவேற்றப்பட உள்ளதாக அயார்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

அயர்லாந்து, மற்றும் வட அயர்லாந்து மக்களின் அமைதி, குணப்படுத்தல், மற்றும் ஒப்புரவிற்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நம்பிக்கையின் செபவழிபாடு விளங்கும் என ஆயர்களின் அறிக்கைக் கூறுகிறது.

அயர்லாந்தின் கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் ஆயர்கள் Armaghலுள்ள தங்கள் பேராலயங்களில் ஒன்றுகூடி, அயர்லாந்து மக்களின் அமைதி மற்றும் ஒப்புரவிற்காக செபிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு பின்னணிகளையும் பாரம்பரியங்களையும், வெவ்வேறு நம்பிக்கைகளையும், ஏக்கங்களையும் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து, கடந்த கால காயங்களை குணப்படுத்தும் நோக்கத்தில், செப்டம்பர் 21ம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று, வருங்காலம் குறித்த நம்பிக்கையுடன் Armagh நகரின் இரு பேராலயங்களிலும் செபவழிபாடுகளை மேற்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...