கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
கண் பார்வையற்ற ஒருவர் கோவிலுக்கு வந்தார். பூசாரி அவரிடம், ''ஐயா, உங்களுக்குத்தான் கண் தெரியாதே? மலையேறி, வரிசையில் நின்று, இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே, கடவுளை உங்களால் தரிசிக்கவாமுடியும்?'' என்று கேட்டார்.
''ஐயா, நான் கடவுளை தரிசிப்பதில் அவருக்கு என்ன இலாபம்? கடவுள் என்னைப் பார்த்தால் போதும். என் துயரங்கள் எல்லாம் ஓடிவிடும் என்று நம்பித்தான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார் பார்வையற்றவர்.
அதே பூசாரி, இறந்தபின் நேரடியாகச் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கத்தின் வாயிலில் எண்ணற்ற தேவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தினர். அவர், முகம் முகமாக இறைவனைக் காணும் ஆவலுடன், அவர்களை நோக்கி, ''இறைவன் எங்கே?''என்று கேட்டார்.
அவர்கள் வியப்புடன், ''என்ன, அவர் பூமியில் இல்லையா?'' என்று கேட்டனர்.
No comments:
Post a Comment