தொழில் செய்வதற்குச் சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: 91வது இடத்தில் இலங்கை
அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான பட்டியலிலேயே இலங்கை 91வது இடத்தில் உள்ளது.
வர்த்தகம், நிதி சுதந்திரம் மற்றும் ஊழல், வன்முறை போன்ற சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை மோசமான நிலையில் இருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
மொத்தம் 144 நாடுகள் இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் நிதி தலைநகராக விளங்கும் அமெரிக்கா கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் பின்தங்கி தற்போது 22வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து, ஜப்பான் நாடுகள் தலா 3 இடங்கள் அதிகரித்து தற்போது முறையே 10 மற்றும் 23வது இடத்தில் உள்ளன.
ஜெர்மனி 2 இடங்கள் முன்னேறி 18வது இடத்திலும், சீனா 97ல் இருந்து முன்னேறி 94வது இடத்திலும் உள்ளன. இந்தியா 97வது இடத்தில் உள்ளது.
அதேவேளை, பாகிஸ்தான் 103வது இடத்திலும், பங்களாதேஷ் 121வது இடத்திலும் உள்ளன.
No comments:
Post a Comment