Friday, 18 December 2015

ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றாக அழித்துவிடுங்கள் 21-வயது பெண் ஐ.நாவிடம் கோரிக்கை

ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றாக அழித்துவிடுங்கள் 21-வயது பெண் ஐ.நாவிடம் கோரிக்கை


ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் உலகநாடுகளின் படையானது தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கும் குழந்தைகள், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், விற்பனை செய்தும், கொன்றும் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் சிக்கி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிர்பிழைத்த யாஷிடி இனப்பெண், தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று கண்ணீர் மலங்க கோரிக்கை விடுத்து உள்ளார்.
யாஷிடி இனத்தை சேர்ந்த நாதியா முராத் பாசீ தாஹா தற்போது ஜெர்மனியில் அகதியாக உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் இவரது கிராமத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். பின்னர் நாதியா முராத் பாசீ தாஹா உள்பட, அங்கிருந்த பெண்களை பஸ்சில் தீவிரவாதிகளின் தலைமையகமான மோசூல் நகருக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு சிறுமிகள், பெண்கள் என்று வேறுபாடு பார்க்காமல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உண்மை சம்பவங்களை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் போரின் போது கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரிக்கும் 15 நபர்கள் கொண்ட குழுவிடம் தாஹா விவரித்து உள்ளார்.
”பெண்கள் மற்றும் சிறுமிகளை அழிக்கும் ஆயுதமாக பாலியல் பலாத்காரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்களால் அடுத்து வாழவே முடியாது என்ற கொடூரம் அரங்கேற்றப்பட்டது. தீவிரவாதிகள் யாஷிடி இனப் பெண்களின் உடல்கள், இறைச்சியை போன்று விற்பனை செய்யப்பட்டது.” என்று நாதியா முராத் பாசீ தாஹா கூறி உள்ளார்.
சில நாட்கள் கழித்து என்னை எடுத்துக் கொண்ட தீவிரவாதி, என்னை ஆடை அணிந்துக் கொள்ளுமாறும், அலங்காரம் செய்துக் கொள்ளுமாறும் கொடுமை செய்தான், பின்னர் அந்த பயங்கரமான இரவில் தான் கொடுமைகளை செய்தான். தீவிரவாதிகளுக்கு சேவை செய்ய வற்புறுத்தினான். என்னை தொடர்ந்து ஒவ்வொரு இரவும் அவமானப்படுத்தினான். இரவு என்னை கடுமையாக தாக்கினான். தீவிரவாதிகளுடன் அறையில் அடைத்தான். பின்னர் நான் சுயநினைவை இழக்கும் வரையில் அவர்கள் குற்றம் செய்தனர். என்று கூறி உள்ளார்.
என்னுடைய சகோதரர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...