Wednesday, 16 December 2015

டெல்லியில் புகை மாசுவால் ஆண்டுக்கு 30 ஆயிரம் உயிர்கள் பலியாகின்றது!

டெல்லியில் புகை மாசுவால் ஆண்டுக்கு 30 ஆயிரம் உயிர்கள் பலியாகின்றது!


அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகன எண்ணிக்கை உயர்வு போன்ற முக்கிய காரணங்களால் தலைநகர் டெல்லி பெருமளவில் மாசடைந்த நகரமாக உள்ளது. இந்தப் புகை மாசுவால் அங்கு சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதைத் தடுக்க டெல்லி அரசு வாகன குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சுற்றுச்சுழலுக்கும் உடல்நலத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்த மத்திய அறிவியல் மற்றும் சூழலியல் மையம் ஆய்வறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, 2000-ம் ஆண்டில் 8 லட்சமாக இருந்த டெல்லியின் மக்கள் தொகை 2012-ம் ஆண்டில் 32 லட்சமாக ஆகியுள்ளது. கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் உலகில் மிகவும் மாசடைந்த நகரமாக அறிவிக்கப்பட்ட டெல்லியில், காற்று மாசு ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் உயிர்கள் வரை காவு வாங்கி வருகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...