அல்சர் நோயாளிகளின் கவனத்திற்கு
குடல் புண் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
சாலிசிலேட் மருந்துகள், அஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
செய்ய வேண்டியவைகள்:
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், அதிக தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம்.
யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும்.
முறையாக இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும். வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது.
குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
வலியோ அல்லது அசௌகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடும்.
No comments:
Post a Comment