Monday, 2 September 2013

மின்சாரத்தைச் சேமிக்கும் வழிகள்

மின்சாரத்தைச் சேமிக்கும் வழிகள்

ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமிப்பது இரண்டு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதால் வீட்டு மின்கட்டணம் குறைவாக வரும், மேலும், வருங்காலத்துக்கு மின் தடையற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
இதற்கு வீட்டில் செய்ய வேண்டிய சில விடயங்கள்
வீட்டில் தேவையற்ற இடங்களில் ஒளிரும் மின் விளக்குகளையும், மின் விசிறிகளையும் அவ்வப்போது அணைத்துவிட வேண்டும்.
வெளிச்சமான அறைகள் உள்ள வீடுகளைக் கட்ட வேண்டும். வாடகைக்கு குடிபோகும்போது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரும்படியான வீடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இதனால் பகல் நேரத்தில் மின் விளக்குகள் போடுவதைத் தவிர்க்கலாம்.
சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும்போது அடர்த்தி குறைந்த நிறங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
மஞ்சள் நிற பல்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, டியூப் லைட் மற்றும் தற்போது வந்துள்ள சிறு குழல்விளக்குகளைப் பயன்படுத்துவதால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
மின் விசிறிகளையும், டியூப் லைட்டுகளையும் அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.
துணி துவைக்கும் இயந்திரத்தில், உலர வைக்கும் கருவிகளை, தேவைப்பட்டால்மட்டும் பயன்படுத்தலாம். வெயில் அடிக்கும் நாட்களில் வெளியில் துணிகளைக் காயப்போடுவதே சிறந்தது.
தண்ணீரைச் சூடுபடுத்தும் கருவிகளைத் தேவைப்படும்போது தண்ணீரைச் சூடுபடுத்தி உடனே பயன்படுத்துங்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வோர் அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதைவிட, கூடுமானவரை அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது சிறந்தது.
இடம் இருந்தால் காற்றோட்டமான, வெளிச்சமான இடத்தில் அமர்ந்து சில மணி நேரங்கள் பொழுது போக்குவது, உடலுக்கும், மின்சார சேமிப்புக்கும் சிறந்த வழியாகும்.
தூங்கச் செல்லும் முன்பும், வீட்டைவிட்டுக் கிளம்பும் முன்பும், அனைத்து மின் சாதனங்களும் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளனவா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

ஆதாரம் தினமணி
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...