Wednesday, 25 September 2013

அமெரிக்க விருதுக்கு மலாலா தெரிவு

அமெரிக்க விருதுக்கு மலாலா தெரிவு

Source: Tamil CNN
உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 2007�ம் ஆண்டு முதல் ‘கிளிண்டன் கோபல் சிட்டிசன் அவார்டு’ என்ற விருது வழங்கப்படுகிறது. அமெரிக்கா சார்பில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த விருதுக்கு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் பங்கெர் ராய், பாகிஸ்தான் சாதனை மாணவி மலாலா யூசுப்சை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மழைநீரை சேகரித்து குடிநீராக வினியோகிக்கும் சிறப்பான திட்டம் வகுத்ததற்காக பங்கெர் ராய்க்கும், குழந்தைகள் கல்வி பயில ஆர்வமுடன் செயல்பட்டதற்காக மலாலாவையும் பாராட்டி இந்த விருதுகளை வழங்குகிறார்கள். இந்த விருதுகள் நியூயார்க் நகரில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. அதில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...